பெரும்பாலான வீடுகளில் பல்லிகள் இருப்பது ஒரு சாதாரண விஷயம். ஆனால், சில சமயங்களில் அவை தரும் தொல்லை பெரியதாக இருக்கும். முக்கியமாக, சமையலறையில் பல்லிகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்த பல்லிகள் உணவில் ஊர்ந்து செல்லும்போது, சில ஒவ்வாமைகளை உண்டாக்கலாம். இதிலிருந்து விடுபட பல வழிகளை முயற்சித்தும் பலன் இல்லையா? அப்படியானால், இந்த ஒரு மாத்திரையை வைத்து பல்லிகளை எப்படி விரட்டலாம் என்று பார்க்கலாம்.
Advertisment
தேவைப்படும் பொருட்கள்
ஒரு பாராசிட்டமால் மாத்திரை 20 மிளகு ஒரு மூடி டெட்டால் தண்ணீர் ஒரு ஸ்பிரே பாட்டில் அல்லது ஷாம்பூ பாட்டில்
Advertisment
Advertisements
தயாரிக்கும் முறை
முதலில், ஒரு பாராசிட்டமால் மாத்திரையை எடுத்து நன்றாகப் பொடியாக்கி கொள்ள வேண்டும். அடுத்து, அதேபோல 20 மிளகையும் எடுத்து, அதன் வாசனை வெளிவரும் அளவுக்கு லேசாக நசுக்கி, பொடியாக்கிக் கொள்ள வேண்டும். இப்போது, ஒரு கிண்ணத்தில் பொடித்த பாராசிட்டமால் மற்றும் மிளகு இரண்டையும் சேர்க்க வேண்டும். பிறகு, ஒரு மூடி டெட்டாலையும் அந்தக் கிண்ணத்தில் ஊற்ற வேண்டும்.
இறுதியாக, ஒரு கப் தண்ணீர் சேர்த்து, ஒரு குச்சி அல்லது கரண்டியால் எல்லாவற்றையும் நன்றாகக் கலக்க வேண்டும். இதுதான் பல்லிகளை விரட்டுவதற்கான எளிய தீர்வாகும்.
பயன்படுத்தும் முறை
இப்போது, இந்த லிக்குவிடை ஒரு வடிகட்டி மூலம் ஒரு ஸ்பிரே பாட்டிலுக்கு மாற்றிக் கொள்ள வேண்டும். பழைய ஷாம்பூ பாட்டில்கள் இருந்தால், அதையும் பயன்படுத்தலாம். இந்த லிக்குவிடை பல்லிகள் அதிகம் வரும் இடங்களில், அதாவது சமையலறை, சின்க் பகுதி, சாப்பாட்டு மேசை, மற்றும் அடுப்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஸ்பிரே செய்ய வேண்டும். இதன் வாசனையை பல்லிகள் விரும்பாது. டெட்டாலின் கிருமிநாசினி குணம், மிளகின் காரமான நெடி, மற்றும் பாராசிட்டமால் மாத்திரையின் மணம் ஆகிய மூன்றும் சேர்ந்து பல்லிகளை அந்தப் பக்கமே வரவிடாமல் தடுக்கும்.
குறிப்பு: இந்த லிக்குவிடை உணவுப் பொருட்கள் மீது நேரடியாக தெளிக்க வேண்டாம். மேலும், குழந்தைகள் கைக்கு எட்டாதவாறு பத்திரமாக வைக்க வேண்டும். பல்லிகளை விரட்டுவதற்கு இது ஒரு சிறந்த வழியாகும். உங்களுக்கும் பல்லித் தொல்லை இருந்தால், இந்த முறையை முயற்சி செய்து பாருங்கள்!