New Update
/indian-express-tamil/media/media_files/G2MdhKZDqMDLnQUaRZOz.jpg)
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உள்ளூர்வாசிகளுக்கு இலவச தரிசன திட்டத்தில் சாமி தரிசனம் செய்தவர்கள், அடுத்த 90 நாள்களுக்கு கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்தில் பங்கேற்க விரும்பும் திருப்பதி பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், உள்ளூர் நகரங்களான திருமலை மற்றும் திருப்பதியில் இருந்து இலவச தரிசன திட்டத்தில் பங்கேற்கும் பக்தர்கள், அடுத்த 90 நாள்களுக்கு மீண்டும் கோயிலுக்கு செல்ல முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று முதல் (டிசம்பர் 3) ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும், திருப்பதி, திருமலை, ரேணிகுண்டா மற்றும் சந்திரகிரியில் இருந்து 3,000 பக்தர்கள் இலவசமாக தரிசிக்கும் விதமாக இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வாரமும் திருப்பதி மகாதி திரையரங்கில் 2500 இலவச தரிசன டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படவுள்ளது. மேலும், திருப்பதி மலையில் உள்ள சமுதாய கூடத்தில் 500 இலவச தரிசன டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த டிக்கெட்டுகளை பெற விரும்பும் பக்தர்கள் ஆதார் அட்டையை கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த இலவச தரிசனம் தொடர்பான அறிவிப்பை முதலில் வரவேற்ற உள்ளூர்வாசிகள், தேவஸ்தானத்தின் கட்டுப்பாடுகளைக் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதேபோல், அனைத்து வகையான தரிசனங்களுக்கும் 90 நாள்கள் தடையை அமல்படுத்த தேவஸ்தான நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.