திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் பொழுதுபோக்காக தீப்பெட்டிகள், தீப்பெட்டி லேபிள்கள் சேகரிக்கும் ஃபிலுமினிஸ்ட் ஆவார்.
தீப்பெட்டி அரசியல் குறித்து யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில், தீப்பெட்டி தொடர்பான பொருட்களை சேகரிக்கும் பொழுதுபோக்கு ஃபிலுமினி என்பர். தீப்பெட்டிகளில் பல்வேறு வகைப்படுத்தப்பட்ட தீப்பெட்டிகள் மற்றும் தீப்பெட்டி லேபிள்கள் உள்ளன.
பிலுமெனியில் ஈடுபடுபவர் ஒரு பிலுமினிஸ்ட். இது கிரேக்க மொழியின் phil (loving), லத்தின் மொழியில் lumen- (light) இலிருந்து பெறப்பட்ட வார்த்தைகள் ஆகும்.
நவீன தீப்பெட்டிகள் வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, பெரும்பாலும் வெளி நாடுகளுக்குச் சென்றவர்கள் மற்ற நாடுகளிலிருந்து தீப்பெட்டிகளை நினைவுப் பொருட்களாகக் கொண்டு வந்தனர். அதில் சிறப்பு விளம்பரம் அல்லாத தொகுப்புகளை வெளியிட்டன.
அட்டை தீப்பெட்டிகளில் குறைவான வித்தியாசமான படங்கள், மிகவும் மோசமான அச்சு தரம் மற்றும் சில சமூக நிகழ்வுகளின் பரவலான அறிமுக தீப்பெட்டி சேகரிப்புகளை பட்டியலிட்டு காட்சிப்படுத்தப்பட்ட ஆல்பங்களின் வரிசையில் தீப்பெட்டி அரசியலும் உள்ளது.
தீப்பெட்டி விளம்பரத்தை குறிப்பிட்ட சந்தர்ப்பங்களுக்கு ஒவ்வொரு வாடிக்கையாளரின் கைகளுக்கு கொண்டு சேர்க்கும் சரியான விளம்பரத்துடன் கொண்டு சேர்க்கின்றனர்.
ஒரு தயாரிப்பு, சேவை அல்லது யோசனையை விளம்பரப்படுத்துவதற்கும் விற்பனை செய்வதற்கும் ஆடியோ அல்லது காட்சி வடிவமான சந்தைப்படுத்தல் மூலம் விளம்பரப்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்றுள்ளோம்.
அச்சு, காட்சி ஊடகம், மின்னணு ஊடகம், வானொலி, வெளிப்புறம் / உள்துறை, நேரடி அஞ்சல், இணையதளங்கள், குறுஞ்செய்திகள் அல்லது சமூக ஊடகங்கள் என விளம்பரங்களிலிருந்து அதிகபட்ச மைலேஜைப் பெறுவதற்கான சிறந்த ஊடக விருப்பங்களை வழங்கும் காலமாயினும் அதிகாலையிலே தேநீர் அருந்த அடுப்பை பற்ற வைக்கும் பொழுது முதலில் எடுப்பது தீப்பெட்டி தான்.
அவ்வகையில் தீப்பெட்டியில் தமிழக அரசியல் அடுப்பங்கரை வரை நுழைந்து விடுவதை தீப்பெட்டி சேகரிப்பு மூலம் அறிந்துள்ளோம். அண்ணா, எம்ஜிஆர் ஆளுமைகளிவிருந்து உதயசூரியன், தாமரை, சைக்கிள் சின்னங்களிலிருந்து விலங்குகள், பறவைகள், பழங்கள் உட்பட பல்வேறு தீப்பெட்டி அட்டை படங்கள் அந்தந்த கால நிகழ்வுகளை கண் முன்னே நிறுத்துகின்றன. தற்பொழுது மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் தேர்தல் சின்னம் என்பது மிக முக்கியமானது ஆகும். தேர்தல் சின்னம் என்பது ஒரு நாட்டின் தேர்தல் ஆணையத்தால் தேர்தல் வாக்குச் சீட்டுகளில் பயன்படுத்தப்படும் சுயேச்சை வேட்பாளர் அல்லது அரசியல் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட சின்னமாகும்.
/indian-express-tamil/media/media_files/rFH4cAr3McNVGqLfL1n1.jpeg)
அவ்வாறு ஒதுக்கப்பட்ட சின்னத்தினையே கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தில் பயன்படுத்தப்படுகின்றன, மேலும், வாக்குச் சீட்டில் அச்சிடப்படுகின்றன, அங்கு ஒரு வாக்காளர் தொடர்புடைய கட்சிக்கு வாக்களிக்க ஒரு அடையாளத்தை வைக்க வேண்டும். வாக்குச் சீட்டுகளில் வேட்பாளர்களின் பெயர்களைப் படிக்க முடியாத, படிப்பறிவற்றவர்கள் வாக்களிக்க வசதி செய்வது அவர்களின் நோக்கங்களில் ஒன்றாகவும் உள்ளது.
அவ்வகையில் காலங்காலமாக அரசியலில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பதற்காக வர்த்தக ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் தங்கள் பிரச்சாரத்திற்கு தீப்பெட்டி அரசியலை கையில் எடுத்திருப்பதை பழங்கால தீப்பெட்டிகள் மூலம் உணர முடிகிறது.
இவ்வாறு தீப்பெட்டிகளில் உள்ள அண்ணா எம்ஜிஆர் ஆளுமைகள், உதயசூரியன், சைக்கிள், தாமரை பொறித்த தீப்பெட்டி அட்டைகளை காட்டி நிகழ்காலத்தோடு தீப்பெட்டி அரசியலை ஒப்பிட்டு யோகா விஜயகுமார் பேசினார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“