Advertisment

தினமும் 8 மணி நேரத்திற்கும் அதிகமா உட்கார்ந்த இடத்தில் வேலை- உங்கள் உடலுக்கு என்ன நடக்கும்?

ஒவ்வொரு நாளும் 8 மணிநேரம் தொடர்ந்து உட்காரும் போது, உங்கள் உடலில் என்ன நடக்கிறது என்ற நுணுக்கங்களை அவிழ்ப்போம்...

author-image
WebDesk
New Update
Lifestyle

What happens to your body when you stare at the screen daily for more than 8 hours?

டெஸ்க் ஜாப்ஸ் மற்றும் டிஜிட்டல் ஸ்கிரின்ஸ் ஆதிக்கம் செலுத்தும் சகாப்தத்தில், சராசரி மனிதர்கள் தங்கள் நாளின் குறிப்பிடத்தக்க பகுதியை கணினி முன் அமர்ந்து செலவிடுகிறார்கள். உட்கார்ந்த வாழ்க்கை முறை நமது உடல் மற்றும் மன நலனில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்துகிறது.

Advertisment

ஒவ்வொரு நாளும் 8 மணிநேரம் தொடர்ந்து உட்காரும் போது, ​​உங்கள் உடலில் என்ன நடக்கிறது என்ற நுணுக்கங்களை அவிழ்ப்போம், டிஜிட்டல் ஸ்கிரினை மையமாகக் கொண்ட வாழ்க்கையில் கவனிக்கப்படாமல் போகும் பல்வேறு உடல்நல பாதிப்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவோம்.

டாக்டர் சப்னா கோட்வாலிவாலே (Ophthalmologist, Ruby Hall Clinic), நீங்கள் நீண்ட நேரம் உட்கார்ந்து திரையை உற்றுப் பார்த்தால் உங்கள் உடலில் ஏற்படும் பல எதிர்விளைவுகளை விளக்கினார். இந்தப் பிரச்சனைகளைத் தடுக்கும் வழிகளையும் அவர் பரிந்துரைக்கிறார்.

வறண்ட கண்கள்

நாம் தொடர்ச்சியாகத் திரையை உற்றுப் பார்க்கும்போது, ​​இயல்பைவிட மிகக் குறைவாகவே கண் சிமிட்டுவோம். சாதாரண கண் சிமிட்டும் வீதம் நிமிடத்திற்கு 10-20 முறை ஆகும், இது திரையைப் பார்க்கும்போது நிமிடத்திற்கு 3 முதல் 8 முறை ஆகலாம் என்று டாக்டர் கோட்வாலிவாலே கூறுகிறார்.

ஒரு சாதாரண கண் சிமிட்டும் அனிச்சையானது, நமது லாக்ரிமல் சுரப்பிகளில் இருந்து கண்ணீரை வெளியிடுகிறது. கண் சிமிட்டும் போது வெளியாகும் கண்ணீர், கண்ணின் கார்னியா எனப்படும் டிரான்ஸ்பிரன்ட் பகுதிக்கு ஊட்டச்சத்தை அளிக்கிறது. கண் சிமிட்டுதல் குறைவதால் சுரக்கும் கண்ணீரின் அளவு குறைகிறது, இதனால் கண்கள் வறண்டு போகின்றன.

வறண்ட கண்கள், கண்களில் அசௌகரியம், நீர் மற்றும் சிவத்தல் ஆகியவற்றை ஏற்படுத்தும். நாள்பட்ட வறண்ட கண்கள் கார்னியாவில் கீறல்களை ஏற்படுத்தும் மற்றும் பார்வையை குறைக்கலாம். மேலும் கண்களை தொற்று நோய்களுக்கு ஆளாக்குகிறது.

தடுக்க

ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும், ஸ்கிரினில் இருந்து 5 நிமிட இடைவெளி எடுத்து சுற்றி நடக்கலாம்.

தொடர்ந்து கண்களை சிமிட்டிக்கொண்டே இருங்கள்.

கண்களில் நீர் தெளிப்பதைத் தவிர்க்கவும்.

ஒமேகா-3-கொழுப்பு அமிலங்களுடன் (நெய், நட்ஸ், ஆளி விதைகள் போன்றவை) டயட்ரி சப்ளிமெண்ட்ஸ்

உங்கள் கண் மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் லுப்ரிகேண்ட் ஐ டிராப்ஸ்

கிட்டப்பார்வை

நீண்ட நேரம் உங்கள் கண்களுக்கு ஓய்வு கொடுக்காமல் இருப்பது, ஸ்கிரின் அதிகமாகப் பயன்படுத்துவது தலைவலி மற்றும் கண் வலி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும்.

தடுக்க

தகுந்த கண்ணாடிகளை அணிந்து, உங்கள் கண்களை சீரான இடைவெளியில் (ஒவ்வொரு வருடமும்) பரிசோதிப்பது அறிகுறிகளைத் தடுக்கலாம் அல்லது அவற்றை மாற்றியமைக்கலாம்.

20-20-20 விதியைப் பின்பற்றவும். ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும், 20 அடி தூரத்தில் உள்ள ஒரு பொருளை 20 வினாடிகளுக்குப் பாருங்கள். கணினித் திரையின் நிலையை உங்கள் கண் மட்டத்தில் வைத்திருங்கள்.

கண்ணாடி அணியாமல் இருப்பது கண்களைச் சுற்றி வீக்கம் மற்றும் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

Head ache

உடல் வலி                                                                                      

முறையற்ற உடல் தோரணை மற்றும் போதுமான ஓய்வு இல்லாததன் காரணமாக கழுத்து மற்றும் முதுகில் தசை வலியை உருவாக்கலாம்.

தடுக்க

தோரணையை நேராக வைத்திருக்க உங்கள் மடிக்கணினி அல்லது கணினியை ரெய்ஸ்டு ஸ்டாண்டில் வைக்கவும்.

தூக்க பிரச்சனைகள்

சாதனங்களின் திரையில் இருந்து ப்ளூ லைட் உமிழ்வு காரணமாக, பல தூக்க பிரச்சினைகள் ஏற்படலாம். இது உடலின் வளர்சிதை மாற்றத்தை சீர்குலைத்து, எடை அதிகரிப்பு மற்றும் நோய்களுக்கு வழிவகுக்கும்.

தடுக்க

தூங்குவதற்கு குறைந்தது 2-3 மணிநேரத்திற்கு முன் திரையை அணைக்கவும்.

அறையில் மிதமான ஒளி மற்றும் போனில் பிரைட்னெஸை குறைந்தபட்சமாக வைத்திருங்கள். அன்டி ரிஃப்ளக்டிவ் ஸ்கிரின் கவர் மற்றும் கண்ணாடிகள் உதவும்.

நீண்ட நேரம் திரையைப் பயன்படுத்துவதால் கண் விழித்திரையில் பிரச்சனைகள் ஏற்படலாம்.

Read in English: What happens to your body when you stare at the screen daily for more than 8 hours?

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment