புதிதாக திருமணமான தம்பதிகள் ரொம்ப கவனமாக எதிர்பார்த்து பிளான் செய்யும் முக்கியமன விஷயம் தேன்நிலவு. ஹனிமூனுக்கு தகுந்த இடங்களை கண்டறிந்து செல்ல வேண்டும். அப்படி நீங்கள் ஹனிமூனுக்கு செல்ல ஏற்ற 6 இடங்களை அறிந்துகொள்ளுங்கள்.
1. லட்சத்தீவுகள்:
/tamil-ie/media/media_files/uploads/2017/11/laksh-300x225.jpg)
கவர்ச்சியான தீவுகளும், தீவுக்கூட்டங்களும் அடங்கிய லட்சத்தீவுகள், இந்தியாவின் மிக அழகிய கடற்கரைகளுக்கு சொந்தமானவை. அடர்ந்த தென்னை மரங்கள், வெள்ளை மணல் அடங்கிய கடற்கரை, ஆகியவையால் லட்சத்தீவுகள் தேன்நிலவு செல்ல ஏற்ற இடமாக திகழ்கிறது. நீர் சார்ந்த விளையாட்டுகளில் ஆர்வம் கொண்ட ஜோடிகளாக இருந்தால், எந்தவித கேள்விக்கும் இடமில்லாமல் லட்சத்தீவுகளுக்கு செல்லலாம். அங்கு சென்று ஸ்கூபா டைவிங், ஃபிஷ்ஷிங், ஸ்னோர்கெலிங் செய்து உங்கள் இணையுடன் காதல் செய்யலாம்.
2. தவாங்:
/tamil-ie/media/media_files/uploads/2017/11/tawang-300x225.jpg)
பள்ளாத்தாக்குகள், மலைகள் நிறைந்த தனித்து நிற்கும் தவாங், அருணாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 10,000 அடியில் அமைந்திருக்கும் தவாங்குக்கு சென்றால், புதுமண தம்பதிகள் ஒருவித அமைதியை பெறலாம். திபெத் கலாச்சாரம் நிறைந்த தவாங்கில், கல்லரைகள் எங்கும் காணப்படும். அந்த மக்களின் கலாச்சாரத்தை தெரிந்துகொள்ள நினைக்கும் தம்பதிகள் இங்கு செல்லலாம்.
3. ஷிலாங்:
/tamil-ie/media/media_files/uploads/2017/11/shillong-300x169.jpg)
எப்போதுமே குளிர்ச்சியான காலநிலையில் இருக்கும் மேகாலயாவில் உள்ள ஷிலாங், வடகிழக்கு இந்தியாவில் தேன் நிலவு செல்வதற்கு சிறந்த இடமாகும். கிழக்கின் ஸ்காட்லாந்து என அழைக்கப்படும் ஷிலாங், அழகிய நீர்வீழ்ச்சிகள், அடர்ந்த காடுகள், குகைகள், பாரம்பரியமான மரப்பாலங்களுக்கு சொந்தமானவை. ஆண்டுதோரும் நிகழும் இசை நிகழ்ச்சிகள், பாரம்பரிய நிகழ்வுகளால் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் ஷிலாங்குக்கு பயணப்படலாம்.
4. வியட்நாம்:
/tamil-ie/media/media_files/uploads/2017/11/vietnam-300x169.jpg)
இயற்கையான அழகு, கலாச்சாரம் ஆகியவற்றால் தனித்துவமான தேன்நிலவு இடமாக வியட்நாம் விளங்குகிறது. பச்சைப்பசேலான சூழ்நிலை, கவர்ச்சியான சுற்றுப்புறம், நீண்ட கடற்கரைகள் ஆகியவற்றால் உங்களுக்கு மிகவும் பிடித்தமான இடமாக வியட்நாம் விளங்கும்.
5. துருக்கி
/tamil-ie/media/media_files/uploads/2017/11/turkeyt-300x225.jpg)
வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் மீது ஆர்வம் கொண்ட தம்பதிகளா நீங்கள்? அப்படியென்றால் துருக்கி உங்களுக்கேற்ற தேன் நிலவு இடம்தான். குகை ரெஸார்ட்டுகள், ஸ்பா, ஆகியவை உங்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கும்.
6. கஜ்ஜியார்:
/tamil-ie/media/media_files/uploads/2017/11/khajjiar-300x225.jpg)
ஷிம்லா, மணாலி செல்வதில் உங்களுக்கு விருப்பமில்லையென்றால், இமயமலையில் அமைந்திருக்கும் கஜ்ஜியார் செல்லலாம். இதை குட்டி ஸ்விட்சர்லாந்து எனக்கூட அழைக்கலாம். ட்ரெக்கிங், பாராக்ளைடிங், சோர்பிங் உள்ளிட்ட சாகசங்கள் மேற்கொள்ளவும் இது சிறந்த இடமாகும்.