இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தை இன்று (ஜன.28, 2024) தொடங்கிவைத்தார்.
முன்னதாக, 207 மூத்த குடிமக்களுக்கு பயணவழிப் பைகளை வழங்கினார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “திமுக ஆட்சி அமைத்த பின்னர், பல்வேறு கோவில்களுக்கு பக்தர்கள் செல்லும் வகையில் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன” என்றார்.
தொடர்ந்து, “மானசரோவர் புனித பயணம் செல்லும் 500 நபர்கள், நேபாளத்திலுள்ள முக்திநாத் திருக்கோயிலுக்கு புனித பயணம் செல்லும் 500 நபர்களுக்கு அரசு மானியம் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது” என்றார்.
மேலும், “ திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவற்றை ஒரேமுறையாக சென்று தரிசனம் செய்திடும் வகையில் அறுபடை வீடு ஆன்மிகப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவில் செல்ல எந்த விண்ணப்பமும் வரவில்லை என்ற அமைச்சர் சேகர் பாபு, “சிலர் பயண வழித்தடம் குறித்து கேட்டறிந்தார்கள். அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டன” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“