உடல் எடையைக் குறைப்பது என்பது பலரின் நீண்டகால இலக்காக உள்ளது. பொதுவாக, உடல் எடையைக் குறைப்பதென்றால் கடுமையான உணவுக்கட்டுப்பாடு அல்லது டீடாக்ஸ் ஜூஸ்களை மட்டுமே அருந்த வேண்டும் என்ற எண்ணம் பரவலாக உள்ளது.
ஆனால், ஒரு நாளில் 2 கிலோ எடையைக் குறைப்பது சாத்தியம் என்கிறார் டாக்டர் ரதி.
இதற்கு பசியுடன் இருக்க வேண்டிய அவசியமில்லை. இது நம் பாரம்பரிய முறைகளையும், சரியான நேரத்தில் உணவை உட்கொள்வதையும், தண்ணீரை சரியாகக் குடிப்பதையும், அக்குபிரஷர் புள்ளிகளைப் பயன்படுத்துவதையும் அடிப்படையாகக் கொண்டது. இந்த முறை உடலின் இயற்கையான கடிகாரத்தை மீட்டமைத்து, 2 கிலோ வரை எடை இழப்பிற்கு வழிவகுக்கும்.
https://www.youtube.com/watch?v=0kgMcaujUw8
இரவு 9:30 மணிக்குள் கண்டிப்பாக உறங்க வேண்டும். ஆழ்ந்த உறக்கத்தின் போதுதான் உடல் அதிக அளவில் கொழுப்பை எரிக்கத் தொடங்கும்.
முக்கியமான குறிப்புகள்
இந்த நாள் முழுவதும் பழங்களை எடுத்துக்கொள்ளக் கூடாது. பசி எடுத்தால், கறிவேப்பிலையை மென்று சாப்பிடலாம்.
அக்குபிரஷர் புள்ளிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் நேரம் மற்றும் முறைகளை சரியாகப் பின்பற்ற வேண்டும்.
இந்த திட்டம் அறிவியல் மற்றும் நம் பாரம்பரிய உணவு முறைகளின் கலவையாகும்.
இது ஒரு மந்திரமல்ல, ஆனால் சரியான அணுகுமுறை மற்றும் ஸ்மார்ட் டீடாக்ஸ்.
இந்த ஒரு நாள் திட்டத்தை அடிக்கடி செய்யக்கூடாது. மாதத்திற்கு ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை செய்யலாம்.
எச்சரிக்கை: தைராய்டு பிரச்சனை, பிசிஓடி பிரச்சனை, மற்றும் சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் இந்த திட்டத்தைப் பின்பற்றக்கூடாது.