scorecardresearch

சில நேரம் கேஷூவல் அழகு.. லாஸ்லியா கியூட் கிளிக்ஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு, பிறகு லாஸ்லியா ப்ரென்ட்ஷீப் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.

சில நேரம் கேஷூவல் அழகு.. லாஸ்லியா கியூட் கிளிக்ஸ்!
Losliya Mariyanesan Photos

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் பிறந்தவர் லாஸ்லியா மரியநேசன்.

குடும்ப வறுமையின் காரணமாக, 18 வயதிலே செய்திவாசிப்பாளராக வேலைக்கு சென்றார்.

அங்கு ஓரளவுக்கு கிடைத்த புகழ் மூலம், பிக்பாஸ் சீசன் 3 போட்டியில் கலந்து கொண்டார். அப்போது தான் தமிழ் ரசிகர்களுக்கு லாஸ்லியா அறிமுகமானார்.

இவரது யாழ்ப்பாண தமிழை கேட்கவே பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு, பிறகு லாஸ்லியா ப்ரென்ட்ஷீப் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஏராளமான ரசிகர்கள் லாஸ்லியாவுக்கு கிடைத்தனர்.

இன்ஸ்டாகிராமில் மட்டும்  17 லட்சத்துக்கும் மேற்பட்டோர் லாஸ்லியாவை பின்தொடர்கின்றனர்.

லாஸ்லியா பிக்பாஸ் வீட்டில் இருந்த போது இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் லாஸ்லியாவிடம், திரை உலகம் உங்களை வரவேற்க காத்திருக்கிறது என்று கூறியிருந்தார்.

அதேபோல அவர் தயாரித்து, நடித்த ‘கூகுள் குட்டப்பா’ படத்தில் லாஸ்லியா முக்கிய வேடத்தில் நடித்தார். அவருடன் தர்ஷனும் இப்படத்தில் நடித்திருந்தார்.

மேலும் சில படங்கள் அவர் கைவசம் உள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Losliya mariyanesan photos