இலங்கையில் பிறந்து வளர்ந்த லாஸ்லியா மரியநேசன். குடும்ப வறுமையின் காரணமாக, இளவயதிலே செய்திவாசிப்பாளராக வேலைக்கு சென்றார். அங்கு ஓரளவுக்கு கிடைத்த புகழ் மூலம், பிக்பாஸ் சீசன் 3 போட்டியில் கலந்து கொண்டார். அப்போது தான் தமிழ் ரசிகர்களுக்கு லாஸ்லியா அறிமுகமானார்.
இவரது யாழ்ப்பாண தமிழை கேட்கவே பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு, பிறகு லாஸ்லியா ப்ரென்ட்ஷீப் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், அர்ஜுன் மற்றும் சதீஷ் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சமூக ஊடகங்களில் ஏராளமான ரசிகர்கள் லாஸ்லியாவை பின்தொடர்கின்றனர்.
தற்போது, ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு லாஸ்லியா மெலிந்திருக்கிறார். தனது கூந்தலையும் குட்டையாக வெட்டியிருக்கிறார்.
சமீபத்தில் இன்ஸ்டாவில் பகிர்ந்த புகைப்படத்தில் லாஸ்லியா நீல நிற புடவையில்’ ஜிமிக்கி, மூக்குத்தி அணிந்து, ஹோம்லி லுக்கில் பார்க்க அழகாக இருந்தார்.
தற்போது லாஸ்லியா, இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் தயாரித்து, நடிக்கும் ‘கூகுள் குட்டப்பா’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படம் மே 6 ஆம் தேதி வெளியாகிறது. இந்த பட புரோமஷன் பணிகளின் போது, இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார், கோ ஆக்டர் தர்ஷன் ஆகியோருடன் சேர்ந்து எடுத்து புகைப்படங்களை லாஸ்லியா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அதில் கருப்பு நிற பிளேயின் டாப் உடன், கருப்பு பிங்க் நிறத்தில் புளோரல் டிசைனில் துப்பாட்டா அணிந்து, லாங் ஜிமிக்கி, நெற்றியில் சின்ன பொட்டு என லாஸ்லியா பார்க்க சிம்பிள் லுக்கில் அழகாக இருக்கிறார்.
அதில், கூகுள் குட்டப்பா மே 6 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. காத்திருக்க முடியவில்லை. இந்த வாய்ப்புக்கு மிகவும் நன்றி கே.எஸ்.ரவிக்குமார் சார். என்னை ஆதரித்த என் இன்ஸ்டா ஃபேமிலி அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். #என்றென்றும் நன்றியுடையவள் மற்றும் #ஆசிர்வதிக்கப்பட்டவள் என கேப்ஷனில் எழுதியுள்ளார். இந்த போட்டோஸ் இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
மேலும் சில படங்கள் அவர் கைவசம் உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“