இலங்கையில் பிறந்து வளர்ந்த லாஸ்லியா மரியநேசன். குடும்ப வறுமையின் காரணமாக, இளவயதிலே செய்திவாசிப்பாளராக வேலைக்கு சென்றார். அங்கு ஓரளவுக்கு கிடைத்த புகழ் மூலம், பிக்பாஸ் சீசன் 3 போட்டியில் கலந்து கொண்டார். அப்போது தான் தமிழ் ரசிகர்களுக்கு லாஸ்லியா அறிமுகமானார்.
இவரது யாழ்ப்பாண தமிழை கேட்கவே பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு, பிறகு லாஸ்லியா ப்ரென்ட்ஷீப் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், அர்ஜுன் மற்றும் சதீஷ் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சமூக ஊடகங்களில் ஏராளமான ரசிகர்கள் லாஸ்லியாவை பின்தொடர்கின்றனர்.
தற்போது, ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு லாஸ்லியா மெலிந்திருக்கிறார். தனது கூந்தலையும் குட்டையாக வெட்டியிருக்கிறார். சமீபத்தில் இன்ஸ்டாவில் பகிர்ந்த புகைப்படத்தில் லாஸ்லியா கருப்பு நிற, ஸ்லீவ்லெஸ் உடையில், கூந்தலை ஃப்ரீயாக விட்டு, பார்ப்பதற்கு பாலிவுட் ஹீரோயின் போலவே இருக்கிறார்.
. #HappyPongal #Losliya pic.twitter.com/VOUGz2TWdh
— Losliya Mariyanesan ▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️ᴾᵃʳᵒᵈʸ (@Losliyamaria96) January 14, 2022
அதேபோல ட்வீட்டரில் பகிர்ந்த மற்றொரு போஸ்டில், வெள்ளை நிற சுடிதார் உடன், சிவப்பு நிற துப்பாட்டாவை அணிந்து பார்க்க அழகாக இருக்கிறார்.
லாஸ்லியாவின் படத்தை பார்த்த ரசிகர்கள், உங்களுக்கு மட்டும் எப்படி நாளுக்குநாள் அழகு மெருகேறிக் கொண்டே போகிறது என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.
தற்போது லாஸ்லியா, இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் தயாரித்து, நடிக்கும் ‘கூகுள் குட்டப்பா’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.மேலும் சில படங்கள் அவர் கைவசம் உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “