75 கிலோ டூ 50 கிலோ; இதை அவாய்ட் பண்ணுங்க; லாஸ்லியா வெயிட் லாஸ் டிப்ஸ்!
சின்னதா இருந்த அந்த டிரஸ்ஸஸை பார்க்கும்போது ரொம்ப வருத்தமா இருந்துச்சு. முகத்துல பருக்கள் வர ஆரம்பிச்சுது, இதெல்லாம் என்னை ரொம்பவே பாதிச்சது. அப்போதான் 'இனிமேல் இப்படி இருக்கக் கூடாது'ன்னு முடிவு பண்ணேன்.
சின்னதா இருந்த அந்த டிரஸ்ஸஸை பார்க்கும்போது ரொம்ப வருத்தமா இருந்துச்சு. முகத்துல பருக்கள் வர ஆரம்பிச்சுது, இதெல்லாம் என்னை ரொம்பவே பாதிச்சது. அப்போதான் 'இனிமேல் இப்படி இருக்கக் கூடாது'ன்னு முடிவு பண்ணேன்.
ஸ்ரீலங்காவில் இருந்து இந்தியாவுக்கு வந்த லாஸ்லியா, 'பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். பிக் பாஸ் வீட்டுக்குள் செல்வதற்கு முன்பு 63 கிலோவாக இருந்த லாஸ்லியா, நிகழ்ச்சி முடிந்த பிறகு 75 கிலோவாக உயர்ந்திருந்தார். திடீரென்று உடல் எடை அதிகரித்ததற்கான காரணத்தையும், அதை குறைத்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப அவர் கடைப்பிடித்த வழிமுறைகளையும் மிஸ் வொவ் தமிழா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் லாஸ்லியா பகிர்ந்துக்கொண்டார்.
Advertisment
"ஸ்ரீலங்காவில் இருந்தபோது நான் 50 கிலோவாக இருந்தேன். அதுதான் என் எடையும் கூட. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு உடல் எடை 75 கிலோவை தொட்டது. உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை எல்லாமே மாறிவிட்டது. எப்போதும் வெளியில்தான் சாப்பிடுவேன். வீட்டில் சமைக்க எனக்கு நேரம் கிடைக்காது, சமைக்கவும் தெரியாது.
முதல்ல, இந்த புது உடம்பைப் பார்த்து எனக்கே ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. 'ரொம்ப ஹெல்தியா இருக்கோம்'னு நினைச்சுக்கிட்டேன். ஆனா, கொஞ்ச நாள்ல என்னுடைய பழைய டிரெஸ்ஸஸ் எதுவுமே எனக்குப் போட முடியலை. சின்னதா இருந்த அந்த டிரஸ்ஸஸை பார்க்கும்போது ரொம்ப வருத்தமா இருந்துச்சு. முகத்துல பருக்கள் வர ஆரம்பிச்சுது, இதெல்லாம் என்னை ரொம்பவே பாதிச்சது. அப்போதான் 'இனிமேல் இப்படி இருக்கக் கூடாது'ன்னு முடிவு பண்ணேன்.
Advertisment
Advertisements
பிக்பாஸ் வீட்டுக்குள் ஒரு புதிய சவால்!
நான் பிக்பாஸ் வீட்டுக்குள்ள போகும்போது, கிட்டத்தட்ட 63 கிலோ இருந்தேன். பிக்பாஸ் வீட்டுக்குள் போன பிறகுதான் உண்மையான சவாலே ஆரம்பிச்சது. நான் அதுவரை இந்தியாவுக்கு வந்ததே இல்லை. முதல் தடவையா பிக்பாஸ் ஷோவுக்காகத்தான் வந்தேன். அதனால, இங்க இருக்கிற உணவுப் பழக்கங்கள் எனக்குப் புதுசா இருந்துச்சு. பிக்பாஸ் வீட்டில் காலை உணவாக வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல்னு புதுசு புதுசா சமைச்சுக் கொடுத்தாங்க. மதியம் சாப்பாடு, கோவக்காய் பொரியல்னு சமைச்சோம். இலங்கையில எப்பவுமே நாலு, அஞ்சு விதமான அசைவ உணவுகள் இருக்கும். ஆனா, பிக்பாஸ்ல அது இல்லை.
அதனால, எனக்குப் பிடிக்காத உணவுகளைச் சாப்பிட முடியாமல், அங்க இருந்த தயிர்ல சர்க்கரை போட்டு சாப்பிட்டேன். அதுபோக, திடீர்னு கேக் கிடைச்சா அதையும் அதிகமா சாப்பிட்டேன். 'இவ்வளவு சர்க்கரை சாப்பிட்டா எடை கூடும்'னு அப்ப எனக்கு அந்த விழிப்புணர்வு இல்லை. அந்த மாதிரி நேரத்துல, கண்ட்ரோல் இல்லாம, கிடைக்கிறதை எல்லாம் சாப்பிட்டேன்.
பிக்பாஸ்ல இருந்து வெளியே வந்தப்போ, என்னோட எடை மீண்டும் 68-69 கிலோவா ஏறியிருந்தது. இந்த எடை அதிகரிப்பால் நிறைய ஹெல்த் இஷ்யூஸ் வர ஆரம்பிச்சது. ஒருகட்டத்துல டாக்டர் கிட்ட போனப்போ, 'கண்டிப்பா நீங்க வெய்ட் குறைச்சே ஆகணும்'னு கடுமையா சொன்னார். அதுதான் என் வாழ்க்கையில ஒரு பெரிய திருப்புமுனையா அமைஞ்சது.
டாக்டர் சொன்ன அறிவுரைகளையும், என் மனசுல இருந்த உறுதியையும் சேர்த்து, ஒரு சரியான உணவு முறை, உடற்பயிற்சி, யோகான்னு ஒரு கட்டுப்பாட்டுடன் வாழ ஆரம்பிச்சேன். அது மட்டுமில்லாம, மனசுக்கு ரொம்பப் பிடிச்ச விஷயங்களைச் செய்யறது, மனதை எப்போதும் பாசிடிவா வெச்சிருக்கிறதுன்னு சில பழக்கங்களையும் கடைப்பிடிச்சேன்.
இப்ப என்னோட ஃபிட்னஸ் ரகசியம் இதுதான்:
கார்போஹைட்ரேட்டை குறைச்சு, புரோட்டீன் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டேன். ஜங் ஃபுட், எண்ணெயில் பொரிச்ச உணவுகள்னு எல்லாத்தையும் தவிர்த்து, பழங்கள், காய்கறிகள்னு ஆரோக்கியமான உணவுகளுக்கு மாறினேன். ஜிம், யோகான்னு ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்றதை வழக்கமா வெச்சுக்கிட்டேன். இது உடல் ஆரோக்கியத்துக்கு மட்டும் இல்லாம, மனசுக்கும் ரொம்பப் புத்துணர்ச்சியைக் கொடுத்துச்சு.
மனசு மகிழ்ச்சியா இருந்தாதான் உடலும் ஆரோக்கியமா இருக்கும், என்கிறார் லாஸ்லியா.