பிரபல தமிழ் நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் சந்திரசேகர். ஹவுஸ் ஓனர், மருதா மற்றும் பேட்டைக்காளி படங்களில் நடித்துள்ளார். இருந்தாலும் அயலி படம் இவருக்கு நல்ல விமர்சனங்களை தேடித் தந்தது.
லவ்லின் எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருப்பார். சமீபத்தில் டெல்லி சப்தர்ஜங் கல்லறை, ராஜஸ்தான் ஜெய்ப்பூர் பகுதிகளில் சுற்றிப் பார்த்த போது எடுத்த புகைப்படங்களை லவ்லின் தன் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
படிக்கிணறு
தென்னிந்தியாவில் ஏரிகள், குளங்கள் போல வட இந்தியாவில் படி கிணறுகள் மழை நீரை பாதுகாப்பாக தேக்கி வைப்பதற்காக கட்டப்பட்டது. இவற்றை இன்னும் ராஜஸ்தான்,குஜராத், தில்லி, உள்ளிட்ட வட மாநிலங்களில் இப்போதும் பார்க்கலாம்.
இதற்காக மழைநீர் இயற்கையாக வடிந்து வரும் பாதையில் உள்ள பள்ளமான பகுதியில் பூமி மட்டத்திற்கு கீன் பள்ளம் தோண்டி அதனைச் சுற்றி சுவர்களைக் கட்டி நீரைத் தேக்கினர். இதனால் நீர் ஆவியாவது குறைந்தது. மேலும் நிலத்திற்குள் செல்லும் நீரால் நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்தது.
கி.பி. 6ஆம் நூற்றாண்டுக்கு முன்பே சிறந்த கட்டுமான அமைப்புடன் கூடிய இவ்வகை கிணறுகளைக் கட்டியுள்ளனர்.
சப்தார்ஜங்க் கல்லறை
இது 1754 ஆம் ஆண்டில் மறைந்த முகலாயக் கட்டிடக்கலை பாணியில் நவாப் சப்தர்ஜங்கிற்காக கட்டப்பட்டது.
முகலாயர்களின் கடைசி நினைவுச்சின்னமான சப்தர்ஜங் கல்லறை, ஒரு எத்தியோப்பியக் கட்டிடக் கலைஞரால் வடிவமைக்கப்பட்டது. இது தில்லியில் உள்ள இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் 174 பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களில் ஒன்றாகும் . 2013 இல் ஹாலிவுட் படமான ஜாப்ஸ் இந்தக் கல்லறையில் படமாக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“