/indian-express-tamil/media/media_files/ibHPxsHjPwlStvUmJCYs.jpg)
Low Back Pain Sciatica Stretch exercise doctor tips
முதுகுவலி... பலருக்கும் அன்றாட வாழ்க்கையில் ஒரு பெரும் சவாலாக இருக்கும் பொதுவான பிரச்சனை. கீழ்முதுகில் விறைப்பு, கீல்வாதம், ஸ்பைனல் ஸ்டெனோசிஸ், நரம்புகள் அழுத்துதல் (pinched nerves) அல்லது சியாட்டிகா போன்ற பிரச்சனைகளால் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு, இது மேலும் தீவிரமாக இருக்கும். கடுமையான முதுகுவலி இருக்கும்போது, வேறு எந்தப் பயிற்சியையும் செய்ய முடியாமல், படுத்த படுக்கையாகக் கிடக்கும் சூழ்நிலையும் ஏற்படலாம்.
இப்படிப்பட்ட சமயங்களில், நீங்கள் படுத்திருக்கும் படுக்கையிலேயே செய்யக்கூடிய ஒரு மிக எளிய பயிற்சி இருக்கிறது. இது உங்கள் முதுகுவலியை நீக்கி, வியத்தகு பலன்களை அளிக்கும்.
டாக்டர் மண்டெல் பரிந்துரைக்கும் எளிய ஸ்ட்ரெட்ச்
உங்கள் இரு முழங்கால்களையும் உங்கள் மார்பை நோக்கி கொண்டு வந்து, கைகளால் பிடித்துக்கொள்ளுங்கள். இந்த நிலையில் ஆழமாக சுவாசித்து, சுமார் ஒரு நிமிடம் அல்லது அதற்கு மேலும் அப்படியே இருங்கள்.
இந்தப் பயிற்சியின் பலன்கள்:
இது எரெக்டர் ஸ்பைனே (erector spinae) தசைகளை நீட்டுகிறது. பிட்டம் பகுதியில் உள்ள தசைகளை நீட்டுகிறது. நரம்புகள் வெளிவரும் துவாரங்களை (foramina) திறந்து, நரம்பு அழுத்தத்தைக் குறைக்கிறது.
இதை முயற்சி செய்து பாருங்கள், இதன் பலன்களைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.