உங்கள் எலும்புகளுக்கும் மூட்டுகளுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை உடல் தகுதி உணர வைக்கிறது. ஆகவே, உடலைத் திறந்து சில சிரமங்களைத் தடுக்க உதவும் எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது.
சிகிச்சை நிபுணர் ஜேம்ஸ் மூர் பரிந்துரைக்கும் க்ளூட் ஸ்ட்ரெச் (glute stretch) இத்தகைய ஒரு பயனுள்ள உடற்பயிற்சியாகும். இது கீழ் முதுகு வலியைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. உங்களுக்கு முதுகு வலி இருக்கும்போது, இந்த ஸ்ட்ரெட்ச் செய்து பாருங்கள்! இது உங்கள் குளுட் தசைகளை (glute muscles) இலகுவாக்க உதவுகிறது!
கீழ் முதுகு வலிக்கு குளுட் தசைகள் ஒரு முக்கியக் காரணமாக இருக்கலாம். இவை, பல தசைகளுடன் இணைந்து இடுப்புப் பகுதியைத் தாங்குவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. "உங்கள் உடலை அமைதிப்படுத்த 10 வினாடிகள் வரை, 3 முறை இந்த ஸ்ட்ரெட்ச் செய்யலாம்" என்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.