கீழ் முதுகு வலியுடன் போராடுகிறீர்களா? டிஜிட்டல் கிரியேட்டர் டாக்டர் ஜெஃப் வின்டர்ன்ஹைமர் கூற்றுப்படி, முதுகுத்தண்டு வலியில் இருந்து விடுபட விரும்பினால், சோளம் மற்றும் அது சம்பந்தபந்த சிரப், சர்க்கரை, சிப்ஸ் மற்றும் எண்ணெய் போன்றவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும்.
ஆனால் இந்த இரண்டும் எப்படி இணைக்கப்பட்டுள்ளது?
இயற்கையான, பதப்படுத்தப்படாத சோளம் ஆரோக்கியமானதாக இருந்தாலும், அது பிராசஸிங் போது அதன் ஊட்டச்சத்துக்களை இழந்து நம் உடலை வித்தியாசமாக பாதிக்கிறது. எனவே, உங்கள் உணவில் சோளத்தைச் சேர்த்துக் கொண்டால், அது முழுமையாகவும், சுத்திகரிக்கப்படாததாகவும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், என்கிறார் டாக்டர் சித்தாந்த் பார்கவா. (fitness and nutritional scientist, and co-founder of Food Darzee)
பதப்படுத்தப்பட்ட சோளம் உடலில் ஒரு அழற்சி எதிர்வினையைத் தூண்டும், இது கீழ் முதுகுவலி உட்பட வலிக்கு கணிசமாக பங்களிக்கிறது.
வீக்கம், குணப்படுத்தும் செயல்முறையை மெதுவாக்கும் மற்றும் கீழ் முதுகுவலி போன்ற நிலைமைகளை மோசமாக்கும். மேலும், பதப்படுத்தப்பட்ட சோளம் இன்சுலின் அளவுகளில் விரைவான அதிகரிப்பை ஏற்படுத்தும். வீக்கம் மற்றும் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். அதிக எடை, முதுகெலும்பில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது, கீழ் முதுகு வலியை மோசமாக்குகிறது.
/indian-express-tamil/media/media_files/GzbkxwWip4aC7DfhzYRu.jpg)
சோளத்தில் வைட்டமின்கள் பி, தாதுக்கள் மற்றும் உணவு நார்ச்சத்து உள்ளது, அவை மிதமாக உட்கொண்டால் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லது. முழு சோளத்திலும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இது உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவும், என்று பார்கவா கூறினார்.
உங்கள் உணவுப்பழக்கம் கீழ் முதுகு வலியைக் குறைக்க உதவுமா?
அழற்சி எதிர்ப்பு உணவு, கீழ் முதுகுவலியைக் குறைக்க உதவுகிறது. பெர்ரி, பச்சை இலை காய்கறிகள் மற்றும் காலிஃபிளவர் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிடுவது முக்கியம்.
ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளான கொழுப்பு மீன் (சால்மன், கானாங்கெளுத்தி), நட்ஸ் மற்றும் விதைகளையும் உணவில் சேர்க்க வேண்டும். ரத்த சர்க்கரையை உறுதிப்படுத்த, சுத்திகரிக்கப்பட்ட தானியங்களை விட முழு தானியங்களைத் தேர்ந்தெடுக்கவும். பீன்ஸ், பருப்பு வகைகளில் இருந்து கிடைக்கும் புரதம், சிவப்பு இறைச்சி உட்கொள்வதால் ஏற்படும் அழற்சி விளைவுகள் இல்லாமல் நார்ச்சத்து வழங்குகிறது.
சமைக்கும் போது மஞ்சள் அல்லது இஞ்சியைச் சேர்ப்பது சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு நன்மைகளையும் அளிக்கும். மேலும், நிறைய தண்ணீர் குடிப்பது நம் உடலை நீரேற்றமாக வைத்திருக்கிறது, இதனால் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துகிறது, மேலும் தசைகளில் விறைப்புத்தன்மையைக் குறைக்கிறது, என்று மருத்துவர் பார்கவா கூறினார்.
Read in English: If you have lower back pain, stay a mile away from this food item
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“