இந்த நூற்றாண்டின் நீண்ட சந்திர கிரகணம்... குழந்தைகளுடன் பார்த்து மகிழும் முறைகள்

Lunar Eclipse July 2018 time: சந்திர கிரகணம் நாளை நடைபெற உள்ளது.

Lunar Eclipse 2018 Time: உலகம் முழுவதும் ஜூலை 27, வெள்ளிக்கிழமை அன்று சந்திர கிரகணம் தோன்ற உள்ளது. இரவு நேரம் தொடங்கும் இந்த சந்திர கிரகணம், நள்ளிரவு வரை நீடிக்க இருப்பதாக வானியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Chandra Grahan, Lunar Eclipse July 2018 Date and Time in India: சந்திர கிரகணம் ஜூலை 2018 பற்றிய தகவல்கள்ள்

21 நூற்றாண்டின் நீண்ட சந்திர கிரகணம் நாளை நடைபெற உள்ளது. சுமார் 6 மணி நேரங்கள் நீடிக்க இருக்கும் இந்தச் சந்திர கிரணம் குறித்து அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள்ளது. அதன் செய்தி தொகுப்பு இதோ உங்களுக்காக:

சந்திர கிரகணம் என்றால் என்ன?

Chandra Grahan, Lunar eclipse 27 july 2018 date and time in India

Chandra Grahan, Lunar eclipse 27 july 2018 date and time in India

சூரியன், பூமி, சந்திரன் அனைத்தும் ஒரே நேர் கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் ஏற்படும். பூமியின் நிழல் சந்திரன் மேல் விழுவதால், சந்திரன் பிரகாசம் குறைந்து கருப்பாக காட்சியளிக்கும். இதனைச் சந்திர கிரகணம் என்று அழைப்பார்கள். சில நேரங்களில் சூரியனின் வெளிச்சம் மறைந்து சந்திர கிரகணம் மாலையில் ஏற்படும்போது, அடிவானம் எந்த நிறத்தில் இருக்குமோ, அதுபோன்று சந்திரன் காட்சியளிக்கும். அந்த வேளையில் சிவப்பு நிறத்தில் தோன்றினால், அதனை பிளட் மூன் என்று அழைக்கின்றனர்.

நாளை நடக்கும் சந்திர கிரகணத்தின் ஸ்பெஷல் என்ன?

நடப்பு நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் நாளை விண்ணில் தென்பட உள்ளது. இது நடப்பு நூற்றாண்டின் மிகப்பெரிய கிரகணமாக, 6 மணி நேரம் நீடிக்கும் என்று கூறப்படுகிறது. ரத்தச் சிவப்பு நிறத்தில் தோன்றும் இந்தக் கிரகணத்தில் நிலவு சின்னதாக தோன்றும்.

ஜூலை 27 இரவில் எப்போது தொடங்கும் சந்திர கிரகணம்?

பூமியை சுற்றி வரும் பாதையில், மிகவும் தொலை தூரத்தில் நிலவு இருக்கும் என்ற காரணத்தினால், இந்தக் கிரகணத்தில் நிலா சின்னதாக தோன்றும். இருப்பினும் இதனை இந்தியா உட்பட பல நாடுகளில் காணலாம்.

எங்கேல்லாம் நாளை தோன்றும் சந்திர கிரணத்தை பார்க்கலாம்?

இந்தக் கிரகணம், கெய்ரோவில் இரவு 9.30 மணிக்குத் தென்படும். மாஸ்கோவில் இரவு 10.30 மணிக்கும், டெல்லியில் இரவு 10.44 மணிக்கும் தெரியும் என்று வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, மத்திய ஆப்பிரிக்காவின் சில நாடுகளில் காணலாம். நேரில் பார்க்க முடியாதவர்கள், NASA இணையத்தளத்தில் பார்க்கலாம்.

Blue Moon, Black Moon, Blood Moon, மற்றும் Super Moon பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான அம்சங்கள்!

இந்தியாவில் நாளை இரவு 10.44 மணிக்குத் தொடங்கி நள்ளிரவைத் தாண்டி நீடிக்கும். இந்தியாவில் ஒரு மணியளவில் முழு சந்திர கிரகணம் தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் குழந்தைகளுடன் எப்படி இந்தக் கிரகணத்தை ரசித்து பார்க்கலாம்?

Lunar Eclipse time in India:

  • உங்களிடம் உயர் ரக கேமராக்கள் இருந்தால் அதை வைத்து புகைப்படம் எடுக்கலாம் அல்லது வீடியோவும் எடுத்து அதனை உங்கள் பிள்ளைகளுக்கு நினைவுப் பரிசாக அளிக்கலாம். ஏனெனின் இந்த நூற்றாண்டில் தென்படும் அரியவகை கிரகணம் இது.
  • ஒரு வேளை உயர் ரக கேமராக்கள் இல்லையென்றால், உங்கள் செல்போன் மூலமாகவும் ஃபோட்டோ எடுக்கலாம்.
  • செல்போன்கள் மூலம் சிறந்த புகைப்படங்கள் எடுக்கச் செயலி அல்லது சிறிய லென்ஸ்கள் கடைகளில் இருக்கும். அதனை பெற்று இந்தக் கிரகண புகைப்படங்களை எடுத்து மகிழுங்கள்.
  • கிரகணத்தைச் சிறப்பாக காண ஒவ்வொரு 10 நிமிட இடைவெளிக்கு இடையே இதனைக் கண்டால் வித்தியாசத்தை உணரலாம்.

சந்திர கிரகண வேளையில் உணவு அருந்தலாமா?

நாளை தென்படும் சந்திர கிரகணத்தின்போது  அனைவரும் நேரடியாக தங்களின் கண்களால் பார்க்கலாம் என்று கூறியிருந்தோம். அது எப்படி உடலுக்கு எந்த பாதிப்பும் அளிக்காதோ அதுபோலத் தான் உணவு அருந்துவதும். பொதுவாக இது இரவு 10 மணிக்கு மேல் தோன்றுவதால் அனைவரும் அதற்குள் சாப்பிட்டு முடித்திருப்போம். ஒருவேளைச் சாப்பிடவில்லை என்றாலும், கிரகண வேளையில் உணவு அருந்தலாம். இதனால் எந்த கெட்ட விளைவும் ஏற்படாது.

Chandra Grahan, Lunar eclipse 27 july 2018 effects on rashi palan

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close