Advertisment

ஆண்களோட கம்ஃபர்ட் டிரெஸ்: லுங்கி எப்படி, எங்க இருந்து வந்தது தெரியுமா?

ஆப்பிரிக்கர்களாக இருந்தாலும் சரி, பழங்குடியினராக இருந்தாலும் சரி அல்லது சிவப்பு இந்தியர்களாக இருந்தாலும் சரி, எல்லோரும் இந்த குட்டையான தோல் வகைகளை அணிந்திருந்தனர்

author-image
WebDesk
New Update
Lungi history

Lungi history

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பெண்களுக்கு நைட்டி போல ஆண்களுக்கு லுங்கி ஒரு வசதியான ஆடை. இன்று உலகம் முழுவதும் பரவியிருக்கும் லுங்கி, வளமான வரலாறு மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.

Advertisment

லண்டனில் ஒரு தமிழ் பெண் லுங்கி அணிந்து சாலை, கடை, தெருக்களில் சுற்றி தெரியும் வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

லுங்கியின் தோற்றம்

இடுப்பில் அணியப்படும் லுங்கி, தெற்காசியா முழுவதும் பிரபலமானது. ஆனால் அதன் தோற்றம் சமீபத்திய நூற்றாண்டுகளை விட மிகவும் பின்னோக்கி செல்கிறது என்று ஜெயா ஜெட்லி (Indian handicrafts curator) கூறுகிறார்.

மனித நாகரீகம், தங்களை மறைத்துக் கொள்ள ஆரம்பித்ததில் அது இருந்திருக்க வேண்டும்.

தைக்கப்பட்ட ஆடைகள் பொதுவானதாக மாறுவதற்கு முன்பு, உலகெங்கிலும் உள்ள கலாச்சாரங்கள் வசதிக்காக தங்கள் இடுப்பைச் சுற்றி நீளமான துணிகளை மூடிக் கொண்டன. ஆப்பிரிக்கர்களாக இருந்தாலும் சரி, பழங்குடியினராக இருந்தாலும் சரி அல்லது சிவப்பு இந்தியர்களாக இருந்தாலும் சரி, எல்லோரும் இந்த குட்டையான தோல் வகைகளை அணிந்திருந்தனர், என்று ஜேட்லி விளக்குகிறார்.

நெசவு வளர்ந்தவுடன், மக்கள் புல், மரத்தின் பட்டை மற்றும் இறுதியில் நூலிலிருந்து வடிவமைக்கப்பட்ட "தைக்கப்படாத துணியை" பயன்படுத்துகின்றனர்.

இந்தியாவில் லுங்கி

பைஜாமா போன்ற தைக்கப்பட்ட ஆடைகள் முகலாயர்களுடன் இந்தியாவிற்கு வந்தாலும், வீட்டில் அணிவதற்கு லுங்கி ஒரு எளிய தீர்வாக இருந்தது.

வீட்டில் வசதிக்காகவும் அல்லது வயலில் வேலை செய்வதற்காகவும், அவர்கள் இப்படி இடுப்பை சுற்றிக் கட்டும் துணியை தான் அணிவார்கள். லுங்கியும் அந்த வகைக்குள் வரும்.

பிராந்தியத்தின் அடிப்படையில் லுங்கி வெவ்வேறு வடிவங்களை எடுத்தது. தென்னிந்தியாவில் ஆண்கள் வேஷ்டி அணிவார்கள். மற்றவர்கள் இடுப்பில் நீண்ட துணியை "தங்கள் கால்களுக்கு இடையில்" கட்டி பைஜாமா அல்லது பேண்ட் போன்று உடுத்திக் கொள்வார்கள்.

நவீன இந்தியாவில் லுங்கியின் பரவலான புகழ் சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.

ஜேட்லி பகிர்ந்துகொள்வது போல், “எனது மருமகன் அஜய் ஜடேஜா... மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சென்றபோது... பெரும்பாலும் வெள்ளை நிற குர்தாவுடன் சிவப்பு லுங்கி அணிந்திருந்தார். பல இந்திய ஆண்களுக்கு, லுங்கி அணிவது ஒரு கம்ஃபர்ட்.

அதே நேரத்தில், லுங்கி இந்தியாவில் ஒரு முறையான உடையாக கருதப்படுவதில்லை. ஒரு விழாவாக இருந்தாலும், திருமணமாக இருந்தாலும், கோயிலுக்குச் சென்றாலும், நீங்கள் லுங்கி அணிந்து செல்ல மாட்டீர்கள். நீங்கள் வெள்ளை நிற வேட்டியில் தான் செல்வீர்கள்,” என்கிறார் ஜெட்லி.

சுவாரஸ்யமாக, லுங்கி, இன்று பல்வேறு கலாச்சாரங்களில் தொடர்கிறது. நைஜீரியாவில் லுங்கியை, சரோன் ஸ்டைலில் அணிவார்கள். சமீபத்தில் இளவரசர் ஹாரியுடன் நாட்டிற்குச் சென்றபோது, ​​மேகன் மார்க்லே வெள்ளைச் சட்டையும் லுங்கியும் அணிந்திருந்தார்.

மெட்ராஸ் செக் லுங்கி கதை

மெட்ராஸ் செக் லுங்கி தோற்றம், ஒரு சுவாரஸ்யமான உண்மை.

1800 களின் முற்பகுதியில், ஒரு நிறுவனம் லுங்கிகளைத் தயாரிக்கத் தொடங்கியது, அதன் நிறங்கள் துவைக்கும் போது சாயம் போனது- ஆனால் இது ஒரு குறைபாடாக இல்லாமல் "பீளிடிங் மெட்ராஸ் செக்" என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது, என்று ஜெட்லி பகிர்ந்து கொண்டார்.

Read in English: Woman goes viral flaunting her lungi on the streets of London; learn more about this garment’s history

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Fashion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment