/tamil-ie/media/media_files/uploads/2021/01/2-Copy-2-12.jpg)
ma ka pa wife ma ka pa anand makapa wife
ma ka pa wife ma ka pa anand makapa wife : நடிகர் சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், சந்தானம் போன்று இன்று தமிழ் சினிமாவை கலக்கும் பலரும் விஜய் தொலைக்காட்சி மூலம் பிரபலமானவர்கள்தான்.
இதுபோன்று பிரபலமான நடிகர்களில் ஒருவர்தான் மகாபா ஆனந்த்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபராகி வரும் பல்வேறு நிகழ்ச்சிகளை ஸ்வாரஸ்யமாக கொண்டு செல்வதில் அந்த நிகழ்ச்சியில் உள்ள தொகுப்பாளர்களும் பெரும் பங்கு வகிக்கின்றனர். அதில் குறிப்பாக மா.கா.பா மற்றும் பிரியங்கா பற்றி கேட்கவே வேண்டாம்.
வானவராயன் வல்லவராயன் திரைப்படம் மூலம் வெள்ளி திரையில் அறிமுகமான மா.கா.பா நவரச திலகம், கடலை, மீசையை முறுக்கு போன்ற படங்களிலும் நடித்துள்ளார். விஜய் டி.வி.யில் காலடி எடுத்து வைத்தாலே சினிமா அதிர்ஷ்டம் சுலபத்தில் கதவைத் தட்டிவிடும் இருந்த போது மா.கா.பா வின் இந்த வெற்றிக்கு அவரின் மனைவியும் மிகப் பெரிய காரணம் எனலாம்.
சுவர்களில் வால் போஸ்ட்டர் எல்லாம் ஒட்டி தான் இந்த நிலைமைக்கு வந்துள்ளார் மா.கா.பா. சினிமா காரம் காபி’ மூலம் விஜய் டிவியின் கதவு இவருக்காகத் திறந்தபிறகு தன் திறமையின் வெவ்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தினார்.
ரேடியோ மிர்ச்சியில் வேலை பார்க்கும் போது ஹிப் ஹாப் தமிழாவின் கிளப்புல மப்புல பாடல் ஒலிப்பரப்பிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவரே இவர் தான். மா.கா.பா தனது மனைவி பற்றியும் மகள் பற்றியும் அடிக்கடி மேடைகளில் பகிர்ந்துள்ளார். ஒருமுறை அவருக்கு விருது வழங்கிய போது தனது மனைவிக்கு கண்ணீர் உடன் நன்றி கூறி இருந்தார்.
ஏழை மாணவர்கள் படிக்கும் கல்லூரியில் விஸ்காம் மாணவர்களுக்கு நல்ல ஆலோசகராக மாகாபா பணியாற்றி வருவது பலருக்கும் தெரியாத ஒன்று.இவரும் பிரியங்காவும் சேர்ந்துக் கொண்டு அடிக்கும் லூட்டிகள் லாக் டவுனில் அதிகம் தேடப்படும் வீடியோக்களாக உள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.