மாடி தோட்டம் அமைக்க ஆசை இருக்கும் நபர்கள் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்து கொள்ளவும். இந்த தொகுப்பில் இதை பற்றி தெரிந்துகொள்ளலாம்.
மாடித் தோட்டம் அமைக்க தோட்டக்கலைத் துறை இணையதளத்தில் ( https://tnhorticulture.tn.gov.in/ ) விண்ணபிக்க வேண்டும். அதையடுத்து முன்னுரிமை அடிப்படையில் மாடிட்தோட்டத்துக்கான ’கிட்’ டை வீட்டின் அருகில் உள்ள உதவி தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம். இந்த கிட்டில் 6 பாலத்தீன் கவர், 2 கிலோ தென்னை நார் கழிவு கட்டிகள், நுண்ணுயிர் உரங்கள் , 6 வகையான காய்கறி விதைகள். அதாவது தக்காளி, கத்திரிக்காய், வெண்டைக்காய், கீரை, கொத்தரவரங்காய், அவரைக்காய் உள்ளிட்டவை இருக்கும்.
மாடித் தோட்டம் அமைப்பதற்காக வேளாண் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்படும் நிதி குறைந்து கொண்டே போவதால், மாடித் தோட்டம் அமைக்க மானிய விலையில் வங்கப்படும் கிட் எண்ணைக்கையும் கணிசமாகக் குறைந்துவிட்டது.
கடந்த 2021- 2022ம் ஆண்டில் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் மாடித்தோட்ட கிட் மானிய விலையில் வழங்கப்பட்டது. பின்னர் இந்த எண்ணிக்கை 70 ஆயிரம், 50 ஆயிரம், 25 ஆயிரம் என படிப்படையாக குறைந்தது.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான குடும்பங்கள் மாடித் தோட்டம் அமைக்க ஆர்வமாக இருக்கும் நிலையில் மானிய விலையிலான மாடித்தோட்ட கிட்களின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்க அரசு முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று பல பெண்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.