New Update
/indian-express-tamil/media/media_files/2025/01/14/Zr4HulUAeTWB17BsiAm0.jpg)
பொங்கல் பண்டிகை என்றாலே நன்றி தெரிவிப்பது தான். போகியன்று நாம் வழிபடும் குல தெய்வத்திற்கும், தைப் பொங்கலன்று உழவர்களுக்கும், சூரிய பகவானுக்கும், மாட்டுப் பொங்கலன்று மாடுகளுக்கும் நன்றி தெரிவிப்பதற்காவே தமிழர்கள் இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
விவசாயத்திற்கு பெரிதும் உதவியாக இருப்பதால் மாடுகளுக்கு நன்றி கூறுகிறோம். தொழில்நுட்ப வளர்ச்சிகளால் எத்தனையோ முன்னேற்றங்கள் விவசாயத்தில் புகுந்து விட்டாலும், பல ஊர்களில் இன்றும் மாடுகளை விவசாயத்திற்கு பயன்படுத்துகிறார்கள்.
விவசாயம் மட்டுமின்றி சிறுவயதில் இருந்து மாட்டுப் பால் குடித்து வளர்ந்ததால், மாடுகளுக்கும், மனிதர்களுக்கும் இடையேயான சொந்தம் இறுதிவரை நீடித்திருக்கிறது. இவ்வாறு நம் வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாக விளங்கும் மாடுகளை நிச்சயம் போற்ற வேண்டும்.
அதன்படி, மாட்டுப் பொங்கலை சிறப்பிக்க உங்களுக்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பகிரும் வகையில் மாட்டுப் பொங்கல் வாழ்த்து செய்திகளை இந்தக் குறிப்பில் காணலாம்.
தாய் கூட சில மாதங்கள்
தான் எனக்கு பால் ஊட்டினாள்
ஆனால் நான் இருக்கும் வரை
எனக்கு பால் கொடுக்கும் நீ
என் தாயினும் சிறந்தவள்
மாட்டுப் பொங்கல் வாழ்த்துகள்
கலைப்பறியாது உழைக்கும்
உனக்கு தலை வணங்கி
நன்றி கூறுகிறேன்
மாட்டுப் பொங்கல் வாழ்த்துகள்
மாடுகளின் அழகினை
கவிதையில் வர்ணிக்கலாம்
ஆனால் உழைப்பை
வர்ணிக்க ஓராயிரம்
கவிதை போதாது
இனிய மாட்டுப் பொங்கல் வாழ்த்துகள்
விவசாயத்தின் தோழனாய்
உழவனின் தொண்டனாய்
வீரத்தின் அடையாளமாய்
விளங்கும் மாடுகளுக்கு
நன்றி செலுத்துவோம்
இனிய மாட்டுப் பொங்கல் வாழ்த்துகள்
அன்பின் ஒவ்வொரு நிறமும்
உங்கள் வீட்டையும் இதயத்தையும்
நிறைய மகிழ்ச்சியுடன் நிரப்பட்டும்
அனைவருக்கும் இனிய
மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துகள்
இது உழவர்களின் தோழனை
கொண்டாடும் திருநாள்
அனைவருக்கும் இனிய
மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துகள்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.