செம்ம சுவையான ரெசிபி இளநீர் இட்லி. இது மாதம்பட்டி ரங்கராஜின் ஸ்பெஷல் ரெசிபி.
தேவையான பொருட்கள்
4 கப் இட்லி அரிசி
1 கப் உளுந்து
1 ஸ்பூன் வெந்தயம்
1 கப் அவல்
இளநீர் 2 கப்
உப்பு
செய்முறை : 4 கப் இட்லி அரிசியை 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். உளுந்தையும் 3 மணி நேரம் ஊற வைக்கவும். உளுந்துடன் வெந்தயத்தை சேர்த்து ஊற வைக்கவும். தொடர்ந்து அவலை 1 மணி நேரம் ஊறவைத்து தனியாக அரைத்துகொள்ளவும். இட்லி அரிசி மற்றும் உளுந்தை அரைக்கும்போது தண்ணீர் சேர்க்காமல் இளநீர் சேர்த்து அரைக்கவும். இத்துடன் அவல் அரைத்ததை சேர்த்து கலந்து 8 மணி நேரம் புளிக்க வைக்கவும். தொடர்ந்து வழக்கம்போல் உப்பு சேர்த்து இட்லி சுட்டு எடுக்கவும்.