/indian-express-tamil/media/media_files/2025/08/16/madhampatty-rangaraj-joy-crizildaa-2025-08-16-16-01-31.jpg)
madhampatty rangaraj Joy Crizildaa
சமீபகாலமாக, நடிகர் மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது திருமணம் குறித்த சர்ச்சைகள் தொடர்ந்து பேசுபொருளாகவே இருக்கின்றன. சில நாட்களுக்கு முன்பு, கோவையில் நடைபெற்ற விழா ஒன்றில் தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் கலந்துக் கொண்டார் மாதம்பட்டி ரங்கராஜ். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.
இந்த நிகழ்வு நடந்த சில நாட்களுக்குப் பிறகு, அமைதியாக இருந்த ஜாய் கிறிஸில்டா, சோஷியல் மீடியாவில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில் குழந்தை பிரசவிக்க அடிக்கடி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்று வருவது பிடித்திருப்பதாக, ஒரு சாம்பிள் கண்டெய்னரின் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். மேலும், தனது குழந்தையின் பெயர் ராஹா ரங்கராஜ் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Hospital visits be like ❤️
— Joy Crizildaa (@joy_stylist) August 13, 2025
Raha Rangaraj #madhampattyrangaraj#ourlittlebundleofhappiness#parentstobe#PregnancyJourney#baby2025pic.twitter.com/mE524TQjRq
இந்த மர்மத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், மன்மத அன்பு திரைப்படத்தின் “நீல வானம்” பாடலில் இருந்து சில வரிகளைப் பகிர்ந்துள்ளார்: “காலம் தந்த சொந்தமிது, என்னைப் போல ஒரு பெண் குழந்தை, உன்னைப் போல ஒரு ஆண் குழந்தை”. இந்த வரிகள், அவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கப் போவதாக மறைமுகமாக உணர்த்துகின்றனவா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இருப்பினும், இந்த பதிவு ஒரு IVF அல்லது பரிசோதனைக்காக இருக்கலாம் என்றும் சிலர் கருத்து தெரிவிக்கிறார்கள்.
முன்னதாக, ‘பொன்மகள் வந்தாள்’ இயக்குநர் ஜே.ஜே.ஃப்ரெட்ரிக்கை திருமணம் செய்து விவகாரத்து செய்தவர் ஜாய் கிரிசில்டா என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஜாய் கிரிசில்டா குறித்து இதுவரை எந்தவொரு பதிவையும் மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிடாமல் இருப்பது பல்வேறு கேள்விகளையும் எழுப்பி இருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.