ஒரு முறை மாதம்பட்டி ரங்கராஜ் செய்வது போல் கேரளா தாளிப்பு சமைத்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்
2 கொத்து கருவேப்பிலை
4 வத்தல்
6 சின்ன வெங்காயம்
4 பூண்டு
1 ஸ்பூன் கடுகு
உப்பு
3 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
கருவேப்பிலை
பெருங்காயம்
1 மூடி தேங்காய்
செய்முறை : ஒரு மிக்ஸியில் கருவேப்பிலை, வத்தல், சின்ன வெங்காயம், பூண்டு, கடுகு , உப்பு சேர்த்து நன்றாக அரைத்துகொள்ளவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கருவேப்பிலை, பெருங்காயம், அரைத்த விழுது சேர்த்து கிளரவும். இத்துடன் தேங்காய் துருவல் சேர்த்து, சிவப்பு நிறமாக வறுக்க வேண்டும். இந்த தாளிப்பை நாம் விருப்பப்பட்ட குழம்பில் அல்லது பொறியலில் சேர்த்து சாப்பிடலாம். அல்லது இதை கலவை சாதத்துடன் தொட்டு சாப்பிடலாம்.