ஒரு முறை மாதம்பட்டி ரங்கராஜ் செய்வது போல சில்லி கார்லிக் ரொட்டியை நீங்களும் வீட்டில் செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
2 கப் கோதுமை மாவு
25 பூண்டு
8 பச்சை மிளகாய்
2 கை பிடி கொத்தமல்லி இலை நறுக்கியது
உப்பு
பட்டர் தேவையான அளவும்
3 ஸ்பூன் எண்ணெய்
செய்முறை : ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்துகொள்ளவும். இதில் பூண்டி, பச்சை மிளகாய், கொதமல்லி இலை நறுக்கியதை சேர்த்து கிளரவும். தொடர்ந்து அதில் உப்பு , தண்ணீர், எண்ணெய் சேர்த்து பிசைந்துகொள்ளவும். இதை நன்றாக 3 மணி நேரம் அப்படியே விட்டுவிடவும். தொடர்ந்து இதை சப்பாத்தி போல் வட்டமாக தேய்க்கவும். தொடர்ந்து தோசைக் கல்லில், பட்டர் சேர்த்து சுட்டு எடுக்கவும்.