செம்ம சுவையான காளான் ரெசிபி, மாதம்பட்டி ரங்கராஜ் செய்வது போல் செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
காளான் 250 கிராம்
2 பெரிய வெங்காயம்
கான்பிளவர் மாவு கால் கப்
சோயா சாஸ் 3 ஸ்பூன்
தக்காளி சாஸ்
ரெட் சில்லி சாஸ்
எண்ணெய்
உப்பு
மிளகு தூள்
இஞ்சி – பூண்டு விழுது
கரம் மாசாலா
மிளகாய் தூள்
செய்முறை : ஒரு பாத்திரத்தில் காளானை நறுக்கி சேர்க்கவும். அதில் கருவெப்பிலையை நறுக்கி 2 கொத்து சேர்க்கவும். 3 ஸ்பூன் கான்பிளவர் மாவை சேர்க்கவும். உப்பு சேர்க்கவும். தொடர்ந்து 1 ½ ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து பிசையவும். தொடர்ந்து இதில் தண்ணீர் தெளித்து பிசையவும். தொடர்ந்து இதை எண்ணெய்யில் பொறித்து எடுத்து வைக்கவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்க்கவும். அதில் இஞ்சி -பூண்டு விழுது 1 ஸ்பூன் சேர்க்கவும். இதை நன்றாக வதக்கவும். இதில் வெங்காயம் நறுக்கியது, தொடர்ந்து நன்றாக வறுக்கவும். வெங்காயம் பிரவுன் நிறமாக மாற வேண்டும். தொடர்ந்து கருவேப்பிலை, கரம் மசாலா சேர்த்து கிளரவும். மிளகு பொடி சேர்க்கவும். தொடர்ந்து தண்ணீர் 250 எம்.எல் சேர்க்கவும். தொடர்ந்து இதில் 2 ஸ்பூன் தக்காளி சாஸ், சோயா சாஸ் 2 ஸ்பூன், ரெட் சில்லி சாஸ் 1 ஸ்பூன். தொடர்ந்து தண்ணீர் தன்மை குறையத்தொடங்கும்போது வறுத்த மஷ்ரூமை சேர்க்கவும். தொடர்ந்து 15 நிமிடங்கள் வதக்க வேண்டும். இதற்கு மேலாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பரிமாறவும்.