ஒரு முறை மாதம்பட்டி ரங்கராஜ் செய்வது போல் பழைய கோட்டை மிளகு சாதத்தை நீங்களும் செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்
தேவையான பொருட்கள்
பால் ஆடை 3 ஸ்பூன்
1 கப் அரிசி
1 ஸ்பூன் கடுகு
கால் டீஸ்பூன் வெந்தயம்
2 ஸ்பூன் உளுந்து
1 ½ ஸ்பூன் மல்லி
1 ஸ்பூன் மிளகு
4 வத்தல்
1 ஸ்பூன் அரிசி
3 ஸ்பூன் நெய்
செய்முறை : பாலை நன்றாக காயவைக்கும்போது அதில் ஆடை கிடைக்கும் அதை எடுத்து வைத்துகொள்ளுங்கள். குக்கரில் 1 கப் அரிசிக்கு 4 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக அவித்து எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் கடுகு, வெந்தயம், உளுந்து, மல்லி, மிளகு, வத்தல், அரிசி எல்லாவற்றையும் தனியாக சேர்த்து வறுக்க வேண்டும். இதை உப்பு சேர்த்து அரைத்துகொள்ளவும். தற்போது ஒரு பாத்திரத்தில் சாதத்தை எடுத்து அதில் முதலில் நெய் சேர்க்கவும். தொடர்ந்து பால் ஆடை சேர்த்து கிளரவும். தற்போது பொடித்த பொடியை சேர்த்து கிளரவும். அசத்தும் வையில் பழைய கோட்டை மிளகு சாதம் ரெடி.