மாதம்பட்டி ரங்கராஜ் செய்வதில் இந்த சம்பா கோதுமை அல்வா ரொம்ப பிரபலமான ரெசிபியாக கருதப்படுகிறது. இதை நீங்களும் செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
2 கப் சம்பா கோதுமை
6 கப் நாட்டு சர்க்கரை
1 கப் நெய்
தண்ணீர்
செய்முறை : சம்பா கோதுமையை நன்றாக கழுவி, 9 மணி நேரம் ஊற வைக்கவும். தொடர்ந்து அதை அரைத்து, அதில் உள்ள பாலை நன்றாக வடிகட்ட வேண்டும். தொடர்ந்து இந்த பாலை 1 மணி நேரம் ஊற வைக்கவும். இப்படி செய்தால், பால் மற்றும் தண்ணீரும் தனியாக வரும். தண்ணீரை மட்டும் தனியாக எடுக்கவும். தொடர்ந்து இந்த பாலை வீட்டில் உள்ள கப்பால் அளந்து எடுக்கவும். தொடர்ந்து ஒரு கப் பாலுக்கு 3 கப் தண்ணீர் என்ற அளவில் சேர்க்கவும். தொடர்ந்து நாட்டு சர்க்கரையை தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்ச வேண்டும். தொடர்ந்து இந்த பாகை வடிகட்டவும். தொடர்ந்து அதை 1 கம்பி பதம் வரை காத்திருக்கும். தொடர்ந்து கோதுமை பாலை நாம் சேர்த்து கிளரவும். இந்த கலவை அடர்ந்தி ஆனதும் நெய் சேர்கக்வும். 15 நிமிடங்களுக்கு ஒரு முறை 1 ஸ்பூன் நெய் சேர்க்கவும். 1 கப் நெய் வரை சேர்க்கவும். அல்வா பதம் கிடைக்க 2 மணி நேரம் வரை நாம் நன்றாக கிளர வேண்டும்.