மாதம்பட்டி ரங்கராஜ் செய்யும் கல்யாண விருந்தில் இந்த அல்வாவைத்தான் செய்வார்கள். இதை நீங்களும் செய்து பாருங்க
தேவையான பொருட்கள்
400 கிராம் சம்பா கோதுமை
2 லிட்டர் தண்ணிர்
சர்க்கரை 1 ¼ கிலோ சர்க்கரை
நெய் – 400 கிராம்
முந்திரி – 50 கிராம்
ஜாதிக்கா சிறிய் அளவு
ஆர்கானிக் புட் கலர் - சிவப்பு
செய்முறை : சம்பா கோதுமையை நாம் 2 மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும். தொடர்ந்து அதை 2 லிட்டர் தண்ணீர் சேர்த்து ஒரு நாள் முழுக்க புளிக்க வைக்கவும். தொடர்ந்து கோதுமை பாலை வடிக்கட்டவும். வடிகட்டிய கோதுமை பாலை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அடுப்பை ஆன் செய்யுவும். தொடர்ந்து அதில் சர்க்கரை சேர்க்கவும். தொடர்ந்து இதை நன்றாக கிளரவும். தொடர்ந்து கிளரரும் போது, அதன் தன்மை மாறும். தொடர்ந்து நாம் கொஞ்சம், கொஞ்சமாக நெய் சேர்த்து கிளரவும். 20 நிமிடங்களாக நாம் தொடர்ந்து கிளர வேண்டும். ஆர்கானிக் புட் கலர், சிவப்பு கலரை சேர்க்க வேண்டும். தொடர்ந்து நெய்யில் வறுத்த முந்திரி. சிறிய அளவு ஜாதிக்காவை சேர்க்கவும்.