மதுரை அண்ணா நகரில் அமைந்துள்ளது அம்பிகா திரையரங்கம். புகழ்பெற்ற இந்த திரையரங்கம் இடிக்கப்பட உள்ளது. அந்த இடத்தில் ஒரு பெரிய வணிக வளாகம் கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுமார் ஒரு இலட்சம் சதுர அடியில் புதிய ஷாப்பிங் மால் பெங்களூரைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் கட்ட உள்ளது. இதன் மூலமாக 1,00,000 சதுர அடியில் சிறப்பு வசதிகள் கொண்ட ஷாப்பிங் மால் கட்டப்பட உள்ளது. இது நவீன வசதிகள் கொண்ட வணிக வளாகமாக உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக சினிமா ரசிகர்கள் உற்சாகமாக வருகை தரும் அம்பிகா திரையரங்கம், விரைவில் பூரணமாக இடிக்கப்பட உள்ள நிலையில், ரசிகர்கள் நினைவுகளை பகிர வரும் வெள்ளிக்கிழமை, திரையரங்கின் முன்பு செல்போன் மூலம் கடைசி முறையாக செல்பி எடுத்து புகைப்படம் பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட இருப்பதாக திரையரங்க உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
சினிமா ரசிகர்கள் மற்றும் பழைய நினைவுகளைப் பகிர விரும்புவோர், இந்த வாய்ப்பை பயன்படுத்தி அம்பிகா திரையரங்கத்துடன் தங்கள் நினைவுகளை பதிவு செய்யலாம்.