மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, வலையங்குளம் தனிலிங்க பெருமாள் கோயிலில் நேற்று அன்னதான விருந்து நடைபெற்றது. கள்ளழகர் எதிர்சேவையையொட்டி நடந்த இந்த விருந்தில், 18-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 50,000 -க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.
மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் முதல் நாள் எதிர் சேவை நிகழ்ச்சியாக வலையன்குளம் மற்றும் சுற்றுப்புற பகுதியிலிருந்து ஏராளமான மக்கள் வைகையாற்றில் கள்ளழகரை தரிசிக்க செல்வர்கள். இதனை ஒட்டி, ஆண்டுதோறும் தனிலிங்க பெருமாள் கோயிலில் அன்னதானம் வழங்கப்படும்.
விருந்துக்காக சுமார் 3.5 டன் காய்கறிகள் மற்றும் 1,000 கிலோ துவரம்பருப்பு சேர்த்து சாம்பார் தயாரிக்கப்பட்டு, 130 மூட்டை அரிசியில் சாதம் சமைக்கப்பட்டது. பயன்படுத்தப்பட்ட காய்கறிகளில், 1,200 கிலோ கத்தரிக்காய், 750 கிலோ உருளைக்கிழங்கு, 500 கிலோ முருங்கை, 300 கிலோ மாங்காய், 250 கிலோ கேரட், 200 கிலோ பீன்ஸ், 300 கிலோ முட்டைகோஸ் மற்றும் 300 கிலோ வாழைக்காய் அடங்கும். இந்த விருந்திற்கான ஏற்பாடுகளை கிராமக் குழுவைச் சேர்ந்த சின்னத்துரை தலைமையிலான குழுவினர் சிறப்பாக ஒருங்கிணைத்தனர். வலையங்களும் மந்தை திடலில் பக்தர்களுக்கான அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது.
வலையங்குளம் தானாக முளைத்த தனி லிங்க பெருமாள் கோவில் பூஜை முடிந்த பிறகு சாப்பாடு தீரும் வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.