மதுரை ரோட்டரி கிளப் சார்பில், 'வானில் சிறகடிப்போம்' என்ற தலைப்பில் மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் 10 மாணவ - மாணவியரை தேர்வு செய்து அவர்களை சென்னை அழைத்துச்செல்ல முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தேர்வு செய்யப்பட்ட 10 மாணவர்கள் திங்கள்கிழமை மதுரை விமான நிலையம் வந்தனர்.
மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, ஆணையர் தினேஷ்குமார், மண்டலத்தலைவர் சுவிதாவிமல் ஆகியோர் விமான நிலையத்திற்கு வந்து பூ மற்றும் இனிப்புகள் வழங்கி மாணவர்களை வாழ்த்தி வழியனுப்பினர். இதைத் தொடர்ந்து 10 மாணவ, மாணவியர் மற்றும் ஒரு ஆசிரியர் என 11 பேர் மதுரையிலிருந்த விமான மூலம் சென்னை புறப்பட்டு சொன்றார்கள்.
சென்னையில் அவர்கள் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை பார்த்துவிட்டு மீண்டும் பேருந்து மூலமாக மதுரை புறப்பட்டு வருகின்றனர். வானத்தில் பார்த்த விமானத்தில் முதல்முறையாக செல்வது மகிழ்ச்சியாக இருப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“