ஞாயிற்றுக் கிழமை மீனாட்சி திருக்கல்யாணம்: வீட்டில் திருமாங்கல்யம் மாற்றிக் கொள்ளும் நேரம்- நடைமுறை என்ன?
வீட்டில் திருமாங்கல்யம் மாற்றிக் கொள்ளும் நேரம், நடைமுறை குறித்து ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி, ஆத்ம ஞானம் மையம் யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்ட தகவல்கள் இங்கே.
மதுரை என்றதுமே நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் திருக்கோயில்தான். மதுரை ஊரெங்கும் கோயில்கள் இருந்தாலும் மீனாட்சி அம்மன் கோயிலின் சிறப்பே தனிதான். ஈசன் தன் திருவிளையாடல்கள் பல நிகழ்த்தியதும் இந்தக் கோயிலைச் சுற்றித்தான்.
Advertisment
தேசம் முழுவதும் தன் ஆளுகைக்கு உட்படுத்த திக்விஜயம் செய்த மீனாட்சி, கயிலையில் ஈசனைக் கண்டதும் அவரை மணந்துகொள்ள விரும்பினார்.
மீனாட்சியின் விருப்பத்தை நிறைவேற்றத் திருவுள்ளம் கொண்ட ஈசனும் சௌந்திரபாண்டியனாக மதுரைக்கு வந்து மீனாட்சியை மணம் புரிந்துகொள்வார். அதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் சித்திரை மாதம் நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு, மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஞாயிற்றுக் கிழமை (ஏப்.21) காலை 8:35 மணிக்கு மேல் 8:59 மணிக்குள் கோலாகலமாக நடக்கிறது.
மங்களகரமான இந்த நாளில் புதுத் தாலிக் கயிறு மாற்றிக்கொண்டால், மாங்கல்ய பலம் பெருகும் என்பது நம்பிக்கை.
வீட்டில் திருமாங்கல்யம் மாற்றிக் கொள்ளும் நேரம், நடைமுறை குறித்து ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி, ஆத்ம ஞானம் மையம் யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்ட தகவல்கள் இங்கே.
உங்களுடைய தாலியை கழுத்தில் கட்டிக் கொண்டவுடன், கழுத்தில் இருக்கும் மஞ்சள் சரடை கழட்டி பூஜை அறையிலேயே வைத்துக் கொள்ளுங்கள். அம்பாளுக்கு உங்களால் முடிந்த பிரசாதத்தை நிவேதியம் செய்து, மனமுருக வழிபடுங்கள்.
அந்த அம்பாளின் ஆசிர்வாதத்தால் நம்முடைய குடும்பம் ஒற்றுமையாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் உறவு இன்னும் வளம்பெறும் என்பது ஐதீகம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“