மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா: முழு அட்டவணை பாருங்க!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் நவராத்திரி அட்டவணை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் நவராத்திரி அட்டவணை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
madurai

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா: முழு அட்டவணை பாருங்க!

மதுரை அருள்மிகு ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் வரும் 23-09-2025 முதல் 02-10-2025 வரை நவராத்திரி விழா பக்திபரவசமாக நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய அம்சமாக, அம்பாள் தினமும் வெவ்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

Advertisment

விழாவுக்கான அம்பாள் அலங்காரங்கள் வருமாறு:

23-09-2025 – ஶ்ரீ ராஜேஸ்வரி அலங்காரம்

24-09-2025 – வளையல் விற்றது

25-09-2025 – ஏகபாத மூர்த்தி

26-09-2025 – ஊஞ்சல்

27-09-2025 – ரசவாதம் செய்த படலம்

28-09-2025 – ருத்ர பசுபதியார் திருக்கோலம்

29-09-2025 – தபசு காட்சி

30-09-2025 – ஶ்ரீ மகிஷாசுரமர்த்தினி திருக்கோலம்

01-10-2025 – சிவ பூஜை

02-10-2025 – விஜயதசமி (சடையலபுதல்)

நாள்தோறும் மாலை 5.00 மணி முதல் இரவு 9.30 மணி வரை உற்சவர், அம்பாள், அம்மன் சன்னதியில் இரண்டாம் பிராகாரத்தில் அமைந்துள்ள கொலு மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

மேலும், மாலை 5.00 மணி முதல் 8.00 மணி வரை, மூலவர் மீனாட்சி அம்மனுக்கு திரைப்பொட்டு அபிஷேக ஆராதனை மற்றும் பூஜைகள் சிறப்பாக நடைபெறும். அந்த நேரத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். 

இரவு 8.00 மணிக்கு மேல் தரிசனம் மீண்டும் தொடங்கும். பக்தர்கள் அனைவரும் இந்த நவராத்திரி விழாவில் கலந்து கொண்டு அம்மன் அருளை பெறலாம் என நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements
Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: