New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/11/TTF3cbShywLthR2KbYfj.jpg)
மதுரை - ராமேஸ்வரம் - தனுஷ்கோடி சுற்றுலா: ஐ.ஆர்.டி.சி.யின் அட்டகாசமான பிளான்!
இந்திய ரயில்வேயின் கிளை நிறுவனமான இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) சூப்பர் டூர் பிளானை வெளியிட்டுள்ளது.
Advertisment
இந்த திட்டம் மூலம், மதுரை-ராமேஸ்வரம்-தனுஷ்கோடி போன்ற தென்னிந்தியாவின் முக்கிய ஆன்மிக மற்றும் வரலாற்று இடங்களை சுற்றிப் பார்க்க சிறந்த வாய்ப்பு கிடைக்கும். இந்தப் பயணம் பற்றிய முழு விபரங்களை இந்தப் பதிவில் காணலாம்.
பயண திட்டம் என்ன?
முதல் நாள் (வெள்ளி): சென்னை எழும்பூர் ரயில்நிலையத்தில் காலை 5 மணிக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (20627) ரயிலில் பயணம் தொடக்கம்.
மதுரை ரயில்நிலையத்தில் காலை 10:38 மணிக்கு வருகை. மதுரை அருங்காட்சியகம், திருமலை நாயக்கர் மஹால் மற்றும் மீனாட்சி அம்மன் கோயில் சுற்றி பார்க்க முடியும் மதுரையில் இரவு தங்கும் வசதி.
Advertisment
Advertisements
2-ம் நாள் (சனி): காலை உணவுக்குப் பிறகு ராமேஸ்வரத்திற்கு பயணம். டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவிடம், ராமர் பாதம், ஐந்து முக அனுமன் கோயில் மற்றும் தனுஷ்கோடி பார்வை. ராமேஸ்வரத்தில் இரவு தங்கும் வசதி.
3-ம் நாள் (ஞாயிறு): காலை ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம். காலை உணவுக்குப் பிறகு மதுரைக்கு திரும்பி, மதுரை ரயில் நிலையத்தில் பிற்பகல் 2 மணிக்கு இறக்கம். மாலை 5:05 மணிக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (20628) ரயிலில் சென்னை எழும்பூருக்கு பயணம். இரவு 11 மணிக்கு சென்னை எழும்பூரில் பயணம் முடிவடையும்.
பயண திட்டத்தின் விலை என்ன? 2 இரவுகள் 3 நாட்கள் பேக்கேஜின் விலையானது, 3 நபர்கள் சேர்ந்து தங்குமிடம் வேண்டுமென்றால் ரூ.13,260 மட்டுமே ஆகும். 2 பேராக தங்குவது என்றால் ரூ.15, 700 செலவாகும். தனியாக தங்குமிடம் வேண்டுமென்றால் ரூ.25,900/- ஆகும். படுக்கை வசதியுடன் கூடிய குழந்தைகளுக்கான மொத்த பேக்கேஜ் செலவு ரூ.9,460/- ஆகும். படுக்கை வசதி தேவைப்படாத குழந்தைகளுக்கான பேக்கேஜிங் விலை ரூ.7,750ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
என்னென்ன அடங்கும் ? இந்த பேக்கேஜில் உணவு, தண்ணீர், போக்குவரத்து, வழிகாட்டிகள் ஆகியவற்றுக்கான செலவுகள் அடங்கும். உணவு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட உணவுதான் பரிமாறப்படும். விருப்பத்தின்படி வழங்கப்படாது. வேறு உணவு சாப்பிட விரும்பினால் தனிப்பட்ட செலவில் சேரும்
எப்படி புக்கிங் செய்வது? இந்தப் பயணம் ஒவ்வொரு வியாழன் அன்றும் சென்னையில் இருந்து தொடங்குகிறது. நீங்கள் இந்த பயணத்தை மேற்கொள்ள விரும்பினால்,https://www.irctctourism.com/pacakage_description?packageCode=SMR107என்ற இணைய முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.