Advertisment

10 நிமிடத்தில் செய்யலாம் மதுரை ஸ்டைல் கார சட்னி; டின்னருக்கு செய்து பாருங்க

மதுரை ஸ்டைல் கார சட்னி ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
sdasa

மதுரை ஸ்டைல் சுவை அள்ளும் கார சட்னி ரெசிபி 10 நிமிடத்தில்  செய்வது குறித்து இங்கு பார்ப்போம். 

Advertisment

தேவையான பொருட்கள் 

சின்ன வெங்காயம் - 100 கிராம் 
தக்காளி - 3 
பூண்டு - 8 பல் 
வர மிளகாய் - 4 
காஷ்மீரி மிளகாய் - 3 
புளி - சிறிதளவு
உப்பு - தேவையானஅளவு 
வெல்லம் - 2 சிறிய துண்டு

தாளிக்க தேவையான பொருட்கள் 

நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் 
கடுகு - 1/2 டீஸ்பூன் 
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன் 
கறிவேப்பிலை - 1 கொத்து 
பெருங்காயத் தூள் - 1 டீஸ்பூன் 

செய்முறை

முதலில் மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம், தக்காளி, பூண்டு, வரமிளகாய், காஷ்மீரி மிளகாய், புளி, வெல்லம் மற்றும் சிறிது உப்பு சேர்த்து ஒருமுறை அரைத்துக் கொள்ளவும். அடுத்து கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும். இப்போது இதை அரைத்த சட்னியை சேர்த்து கிளறி, மூடி வைத்தபின் பரிமாறினால் சுவையான மதுரை ஸ்டைல் கார சட்னி ரெடி. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment