மதுரை, திருச்சியில் இருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில் இயக்கபபட வேண்டும் என்ற கோரிக்கை பயணிகள் மத்தியில் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், பயணிகள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக வந்தே பாரத் ரயில் அறிமுகம் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.
எட்டு பெட்டிகள் கொண்டு வந்தே பாரத் ரயிலானது மதுரையிலிருந்து காலை 5.15 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் ( வண்டி எண்; 20671), திண்டுக்கல்லுக்கு காலை 5.59 மணிக்கும், திருச்சிக்கு 6.50 மணிக்கும், கரூருக்கு 8.08 மணிக்கும், நாமக்கல்லுக்கு 8.32 மணிக்கும், சேலத்திற்கு 9.15 மணிக்கும், கிருஷ்ணராஜபுரத்திற்கு மதியம் 12.50 மணிக்கும், 1 மணிக்கு பெங்களூர் கண்டோன்மெண்ட் வந்து சேரும்.
அதுபோல மறுமார்க்கத்தில், பெங்களூர் கண்டோன்மெண்டில் இருந்த பிற்பகல் 1.30 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் (வண்டி எண்: 20672) கிருஷ்ணராஜபுரத்திற்கு 1.35 மணிக்கு வந்து சேரும். சேலத்திற்கு மாலை 4.50 மணிக்கும், நாமக்கல்லுக்கு 5.38 மணிக்கும், கரூருக்கு 5.58 மணிக்கும், திருச்சிக்கு இரவு 7.20 மணிக்கும், திண்டுக்கல்லுக்கு 8.28 மணிக்கும், மதுரைக்கு 9.45 மணிக்கும் வந்தடையும்.
செவ்வாய்க்கிழமை தவிர்த்து வாரத்தில் 6 நாட்கள் இந்த ரயில் இயக்கப்படுகிறது. திருச்சி, சேலம் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் 5 நிமிடங்கள் நின்று செல்லும். இதர ரயில் நிலையங்களில் 2 நிமிடங்கள் மட்டுமே நின்று செல்லும்.
இன்று சனிக்கிழமை மதுரை ரயில் நிலையத்தில் நடைபெற்ற துவக்கவிழாவில், ஸ்ரீ வி. சோமண்ணா, மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் மற்றும் ஜல் சக்தி அமைச்சர் இ.சோமண்ணா மற்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர், மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவஸ்தவா, மற்றும் இதர ரயில்வே அதிகாரிகள், மாணவர்கள், ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் விழாவில் பங்கேற்றனர்.
கட்டண விபரம்
பெங்களூர் - மதுரை (சேர்கார் கட்டணம் - ரூ.1,740) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் கட்டணம் ரூ.3,060)
பெங்களூர் - திண்டுக்கல் (சேர்கார் - ரூ.1,645) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.2,870)
பெங்களூர் - திருச்சி (சேர்கார் - ரூ.1,250) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.2,270)
பெங்களூர் - கரூர் (சேர்கார் - ரூ.1,130) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.2,020)
பெங்களூர் - நாமக்கல் (சேர்கார் - ரூ.1,085) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.1,925)
பெங்களூர் - சேலம் (சேர்கார் - ரூ.1,000) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.1,750)
மதுரை - திண்டுக்கல் (சேர்கார் - ரூ.440) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.825)
மதுரை - திருச்சி (சேர்கார் - ரூ.555) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.1,075)
மதுரை - கரூர் (சேர்கார் - ரூ.795) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.1,480)
மதுரை - நாமக்கல் (சேர்கார் - ரூ.845) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.1,575)
மதுரை - சேலம் (சேர்கார் - ரூ.935) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ.1,760)
மதுரை - கே ஆர் புரம் (சேர்கார் - ரூ.1,555) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ2,835)
மதுரை - பெங்களூர் (சேர்கார் - ரூ.1,575) - (எக்சிகியூட்டிவ் சேர்கார் - ரூ. 2,865) என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
செய்தி: சக்தி சரவணன் - மதுரை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.