Advertisment

மகா சங்கடஹர சதூர்த்தி; குடும்பத்தில் சங்கடங்கள் தீரும்: விநாயகரை இப்படி வழிபடுங்கள்!

விநாயகருக்கு பிடித்தமான சதூர்த்தி என்றால் அது தேய்பிறை சங்கடஹர சதூர்த்திதான்.

author-image
WebDesk
New Update
Vinayaga

உங்கள் வீட்டில் இருக்கும் சங்கடங்கள் தீர்க்க, ஒரு வருடத்தில் 12 முறை இந்த நாளில் விரதம் இருந்து விநாயகரை வணங்கினால் நிச்சயம் உங்கள் குடும்பத்தில் இருங்கும் பிரச்சனைகள் தீரும். அது எந்த நாள் என்றால் சங்கடஹர சதூர்த்தி நாள் தான்.

Advertisment

பொதுவாக ஒவ்வொரு கடவுளுக்கும் சிறப்பான ஒரு நாள் இருக்கும். அந்த வகையில் விநாயகருக்கு சிறப்பான ஒரு நாள் என்றால் அது இந்த சங்கடஹர சதூர்த்தி நாள் தான். அதிலும் குறிப்பாக விநாயகருக்கு பிடித்தமான சதூர்த்தி என்றால் அது தேய்பிறை சங்கடஹர சதூர்த்திதான். நாம் ஒரு செயலை செய்யும்போதோ அல்லது, ஒரு நிகழ்ச்சி தொடங்கும்போதோ விநாயகரை வணங்குவது வழக்கம்.

அதேபோல் விநாயகரை வணங்குவதற்கான சிறப்பான நான் தான் இந்த சங்கடஹர சதூர்த்தி. விநாயகர் குண்டாக இருப்பதை பார்த்த சந்திரன் அவரை கிண்டல் செய்ய, கோபமான விநாயகர், அவருக்கு சாபம் கொடுத்துவிடுகிறார். இதனால் சந்திரன் தனது தவறுக்கு மன்னிப்பு கேட்க, அவரை மன்னித்துவிடும், விநாயகர், தன்னை வணங்கும்போது சந்திரனையும் சேர்ந்து வணங்கும்படி செய்ததாக ஒரு ஐதீகம் உள்ளது.

அதன்படி, தேய்பிறை சங்கடஹர சதூர்த்தி அன்று விரதம் இருந்து விநாயகரை வழிபட்டால் அவர் மனம் குளிந்து, சங்கடங்களை போக்குவார் என்றும், விரதத்தின் முடிவில் சந்திரனை வணங்க வேண்டும் என்று சொல்வார்கள். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமிக்கு அடுத்த நாள் சங்கடகர சதூர்த்தி தினமாகும். இந்த நாளில், விரதம் கடைபிடித்து வந்தால், குடும்பத்தில் உள்ள பினிகள் நீங்கி, சுபிட்சம் பெருகும் என்பது ஐதீகம்.

அதேபோல் ஆவனி மாதத்தில் வளர்பிறையில் வரும் சதூர்த்தி (விநாயகர் சதூர்த்திக்கு முன்பு) தினம் மகா சங்கடஹர சதூர்த்தியாகும். இந்த நாளில், விநாயகரை வழிபட்டால், நன்மைகள் கிடைக்கும். குடும்பத்தின் சங்கடங்கள் தீரும். அந்த வகையில், வரும் ஆகஸ்ட் 22-ந் தேதி மகா சங்கடஹர சதூர்த்தி தினம் வருகிறது. மாலை 6.15 மணிக்கு தொடங்கி மறுநாள் மாலை 3.48 மணி வரை இருக்கும் இந்த சதூர்த்தி தினத்தில், விரதம் கடைபிடித்தால், நன்மைகள் அதிகரிக்கும்.

இந்நாளில் விரதம் இருப்பவர்கள் விநாயகர் போற்றி, அஷ்டோத்திரம், அகவல், கவசப் பாடல்களை பாட வேண்டும். மாலையில் வானில் தெரியும் சந்திரனை தரிசித்து விட்டு விநாயகரை வழிபட வேண்டும். உப்பு புளி, காரம் அதிகம் இல்லா உணவை சாப்பிட்டு விரதத்தை முடித்துக்கொள்ளலாம். இந்த நாளில் வீட்டில் விநாயகர் வைத்தும் வழிபடலாம்.  அதேபோல் கோவிலுக்கு சென்றும் பூக்கள் மற்றும் சாம்பிராணி விளக்குகள் ஏற்றி வைத்து வழிபடலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

    Tamil News
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment