சுடுதண்ணீர், ஷார்ட்ஸ், சப்போர்ட் – மகராசி ஸ்ரித்திகா பியூட்டி சீக்ரெட்ஸ்!

Magarasi Srithika Skincare Beauty Secrets அதிக ஆன்ட்டி-ஆக்சிடென்ட் கொண்ட க்ரீன் டீ என்னுடைய ஃபேவரைட்.

Magarasi Srithika Skincare Beauty Secrets Tamil News
Magarasi Srithika Skincare Beauty Secrets Tamil News

Magarasi Srithika Skincare Beauty Secrets Tamil News : நாதஸ்வரம் தொடரில் மலர் கதாபாத்திரம் மூலம் அதிக ரசிகர்களைப் பெற்றவர் ஸ்ரித்திகா. அந்தத் தொடர் நிறைவடைந்த பிறகு, திருமண செய்துகொண்டவர், சிறிது கால இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் சன் டிவியில் மகராசி தொடர் மூலம் மீண்டும் தன் திரைத்துறையைத் தொடரவிருக்கிறார். என்றும் இளமையாகத் தோன்றும் ஸ்ரித்திகாவின் பியூட்டி சீக்ரெட் பற்றி ஏராளமான விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

முகப்பரு, வடுக்கள் என எதுவும் இல்லாத ஸ்ரித்திகா, சிறு வயதிலிருந்தே சோப் பயன்படுத்தியது இல்லையாம். கடலை மாவு, பாசி பருப்பு மாவு மற்றும் பாதாம் ஆகியவற்றை அரைத்து, தினமும் அதை மட்டும்தான் பயன்படுத்துகிறார். அதேபோல், எந்த உடை அணிந்தாலும் ஃப்ரீ ஹேர்ஸ்டைல் செய்துகொண்டால், பளீச் லுக் நொடியில் ரெடி என்கிறார்.

அதிகப்படியான மேக்-அப் போட பிடிக்காத ஸ்ரித்திகா, லிப் பாம் மட்டுமே அதிகம் உபயோகிப்பர். அதிலும் தற்போது இன்ஸ்டாகிராம் வாயிலாக ஏராளமான ஹாம் மேட் பொருள்கள் விற்பனை செய்கிறார்கள் என்பதால், அவைதான் ஸ்ரித்திகாவின் முதன்மை சாய்சாக உள்ளது. அவை மிகவும் நன்றாகவும் இருக்கிறது என்று ஃபீட்பேக்கும் தருகிறார். மேக்-அப் ரிமூவ் செய்ய, தேங்காய் எண்ணெய் அல்லது வேஸ்லின்தான் இவருடைய விருப்பம்.

“பிரைட் நிறத்தில் ஆடை அணிந்தால், நிச்சயம் நாம் பிரைட்டாக தெரிவோம். வீட்டில் ஷார்ட்ஸ் போட்டு சுத்துவது வழக்கம். ஆனால், வெளியில் செல்லும்போது குர்த்தி, சல்வார்தான் என் சாய்ஸ். எவ்வளவு வெய்யில் அடித்தாலும், சுடுதண்ணீர் இல்லாமல் என்னால் இருக்கவே முடியாது. ஐஸ் தண்ணீர் சுத்தமாக எனக்கு செட் ஆகாது. சுடுதண்ணீர்தான் எனக்கு எல்லாம். அதனாலேயே என்னுடன் குட்டியாக ஒரு ஃபிளாஸ்க் இருக்கும். அதேபோல அதிக ஆன்ட்டி-ஆக்சிடென்ட் கொண்ட க்ரீன் டீ என்னுடைய ஃபேவரைட். டீ பேக்கும் எப்போதும் என்னுடனே இருக்கும்” என்கிறார்.

இவை எல்லாவற்றையும் விட குடும்பத்தின் சப்போர்ட் மற்றும் சந்தோஷமாக இருப்பது உடலுக்கும் மனதுக்கும் நல்ல ஆரோக்யத்தைக் கொடுக்கும் என்பதோடு நிறைவு செய்கிறார் ஸ்ரித்திகா.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Magarasi srithika skincare beauty secrets tamil news

Next Story
ஆயிரம் சொல்லுங்க கோவில் புளியோதரை டேஸ்ட்டே வேற மாதிரி தான்! செய்வது எப்படி?puli sadam recipe in tamil: steps to make Kovil puli sadam Tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express