/indian-express-tamil/media/media_files/hMkLL9xELYpECm0kDYb0.jpg)
Maha Sankatahara Chaturthi 2024
சிவபெருமானுக்கு மாதந்தோறும் சிவராத்திரி விசேஷம். முருகப்பெருமானுக்கு மாதந்தோறும் சஷ்டியும் கார்த்திகையும் சிறப்பு வாய்ந்தது. பெருமாளுக்கு ஏகாதசியும் மகத்துவம் வாய்ந்தது. அதேபோல் மாதந்தோறும் வருகிற சங்கடஹர சதுர்த்தி நன்னாளில், விநாயகரைத் தரிசிப்பதும் அவருக்கு அருகம்புல் மாலை சார்த்துவதும் மிகுந்த பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்…
ஆவணி மாதத்தில் விநாயகர் சதுர்த்தி வரும். அதற்கு முன்னதாக வரும் சங்கடஹர சதுர்த்தியை மகா சங்கடஹர சதுர்த்தி என்று விவரிக்கிறது புராணம்.
மற்ற சங்கடஹர சதுர்த்தியை விட மகா சங்கடஹர சதுர்த்தி என்பது ரொம்பவே விசேஷமானது.
நாளை (ஆக.22) சங்கடஹர சதுர்த்தி.
வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் சதுர்த்தி திதி பிறக்கிறது.
இந்த நாளில் நாளில், ஆனைமுகனைத் தரிசித்து வேண்டிக்கொண்டால், கஷ்டங்களும் நஷ்டங்களும் காணாது போகும். வாழ்வில் உயர்வு அனைத்தும் தந்தருள்வார். காரியத் தடைகள் விலகும். நினைத்ததெல்லாம் நிறைவேற்றித் தந்தருள்வார் ஆனைமுகத்தான்!
குறிப்பாக, அன்று மாலையில் அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்று தரிசிக்கலாம். மேலும் அம்மன் ஆலயங்கள், சிவாலயங்களில் உள்ள விநாயகர் சந்நிதிகளுக்கும் சென்று வழிபடலாம்.
அப்போது, பிள்ளையாரப்பனுக்கு அருகம்புல் மாலை சார்த்துவதும் வெள்ளெருக்கு மாலை சார்த்துவதும் விசேஷம்.
அதேபோல், வீட்டில், விளக்கேற்றி, விநாயகரை மலர்களால் அலங்கரித்து, சர்க்கரைப் பொங்கல், பாயசம், கேசரி, கொழுக்கட்டை, சுண்டல் என ஏதேனும் ஒன்றைக் கொண்டு நைவேத்தியம் செய்வது மகத்துவம் வாய்ந்தது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
'ஓம் ஸ்ரீம், ஹ்ரீம், க்லீம், க்ளௌம் கம், கணபதயே, வர வரத ஸர்வ ஜனம்மே வஸமாயை ஸ்வாஹா! என்ற கணபதியின் மூல மந்திரத்தை 21, 51, 108 என்று முடிந்த அளவுக்கு சொல்லி வேண்டினால் நிச்சயம் வீட்டில் சுபீட்சமும் அமைதியும் நிலவும் என்பது நம்பிக்கை.
எனவே, சங்கடஹர சதுர்த்தியில், மாலையில் ஆலயம் செல்லுங்கள். ஆனைமுகனை வணங்குங்கள். உங்கள் சங்கடங்கள் அனைத்தும் தீர்த்து வைப்பார் விநாயகப் பெருமான்..
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us