26-ம் தேதி மகா சிவராத்திரி: விரத முறை என்ன? உங்க வீட்டில் வழிபாடு எப்படி?
மகா சிவராத்திரியை முன்னிட்டு கடைபிடிக்க வேண்டிய விரத முறை, வழிபாட்டு நடைமுறைகள் குறித்து அனிதா குப்புசாமி விவரித்துள்ளார். இதனால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்துக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வுகளில் ஒன்றான மகா சிவராத்திரி, வரும் பிப்ரவரி 26-ஆம் தேதி வருகிறது. இதை முன்னிட்டு பல்வேறு தகவல்களை அனிதா குப்புசாமி தெரிவித்துள்ளார்.
Advertisment
சைவர்களுக்கு மிகவும் உன்னதமான நாளாக மகாசிவராத்திரி பார்க்கப்படுகிறது. மாசி மாதத்தில் அமாவாசைக்கு முந்தைய நாள், சதுர்தசி திதியில் மகா சிவராத்திரியை வழிபடுவது வழக்கம். இத்தகைய சிறப்பு தினங்களின் போது விரதம் இருப்பதன் மூலம் நமது உணர்வுகளை கட்டுப்படுத்த முடியும்.
மேலும், இறைவனை நாம் உணர வேண்டும் என்பதற்காக தான் கண் விழித்து வழிபாடு நடத்துகிறோம். சிவபெருமானை நினைத்து வழிபடும் போது நம் மனம் தூய்மை அடைகிறது. இந்த மகா சிவராத்திரியன்று கிரக சேர்க்கை எல்லாம் சிறப்பாக இருக்கும்.
எனவே, கண் விழித்து சிவ துதிகளை பாடுவது நாம் யார் என்று அறிந்து கொள்வதற்கு உதவுகிறது. அதன்படி, சிவராத்திரியை முன்னிட்டு சிவ லிங்கம் அல்லது சிவ பெருமானின் சிலைக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். சுத்தமான நீரைக் கொண்டு கூட இந்த அபிஷேகத்தை நடத்தலாம்.
Advertisment
Advertisements
இதன் பின்னர், சிலைக்கு விபூதியும், குங்குமமும் அணிவிக்க வேண்டும். மேலும், பால், பழங்கள் போன்றவற்றை படையலாக வைத்து வழிபாடு நடத்த வேண்டும். இதேபோல், எண்ணெய் விளக்கு ஏற்றியும் வழிபட வேண்டும். இதன் மூலம் வழிபாடு நடத்துபவர்களுக்கு ஞானம் கிடைக்கும். இத்துடன் வெற்றிலை, பாக்கும் படைக்க வேண்டும். இதன் வாயிலாக போதும் என்ற மனப்பான்மை கிடைக்கும்.
இந்த அனைத்து அம்சங்களும் மகா சிவராத்திரியில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என அனிதா குப்புசாமி வலியுறுத்துகிறார். அந்த வகையில் நடப்பு ஆண்டில் மகா சிவராத்திரி பிப்ரவரி 26-ஆம் தேதி வருகிறது. அன்றைய தினம் காலை சீக்கிரமாக எழுந்து பூஜை அறையை சுத்தப்படுத்தி வழிபாடுகளை தொடங்க வேண்டும். மேலும், வாசலில் கோலமிட்டு தோரணம் கட்டி தொங்க விடலாம்.
விரதம் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் பிப்ரவரி 26-ஆம் தேதி காலை முதலே தங்கள் விரதத்தை தொடங்கலாம். எனினும், உடல் நல பாதிப்புகள் இருப்பவர்கள் நாள் முழுவதும் விரதம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தேவைப்பட்டால் அன்று மாலை 6 மணி முதல் அடுத்த நாள் காலை வரை அவர்கள் விரதம் இருந்து கொள்ளலாம்.
கண் விழித்து வழிபாடு நடத்த வேண்டும் என நினைப்பவர்கள் 26-ஆம் தேதி முழுவதுமாக விழித்து இருக்கலாம். மேலும், 27-ஆம் தேதி பகல் பொழுதில் விழித்து இருந்து அன்றைய இரவில் தூங்கலாம். இவற்றை கடைபிடித்து சிவபெருமானை வழிபடலாம் என அனிதா குப்புசாமி தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news