அமாவாசையில், மூன்று அமாவாசைகள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. உத்ராயன காலமான தை மாதத்தில் வருகிற அமாவாசை, புரட்டாசி மகாளய பட்சம் என்று சொல்லப்படும் காலத்தில் வருகிற அமவாசை, தட்சிணாயன காலமான ஆடி மாதத்தில் வருகிற அமாவாசை... ஆகிய மூன்று அமாவாசைகள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்கிறது சாஸ்திரம்.
இந்த வருடம் மகாளய அமாவாசை அக்டோபர் 14 ஆம் தேதி வருகிறது.
இந்த மகாளய பட்சத்தில் யமனின் அனுமதியோடு நமது முன்னோர்கள் அனைவரும் பூமிக்கு வருகிறார்கள். அவர்கள் சூரியனின் ஒளிக்கதிர்கள் வழியாக வருகிறார்கள் என கருடபுராணம் கூறுகிறது.
அப்போது நாம் அவர்களுக்குப் பிடித்த உணடு வகைகளையோ, பழ வகைகளையோ தானம் செய்தால் நம்மைத் தேடி பூமிக்கு வரும் அவர்கள் தாகமும், பசியும் தீர்ந்து மகிழ்வார்கள்.
அதேநேரம் நாம் அவர்களின் பசியையும் தாகத்தையும் போக்காவிட்டால் அவர்கள் மனம் வேதனை அடையும். அந்த ஆன்மாக்களுக்கு நாம் செய்யவேண்டிய கடமையை நினைவுபடுத்த குடும்பத்தில் பல தடைகள் ஏற்படும். எனவே மற்ற அமாவாசை நாட்களில் செய்ய முடியாமல் போனாலும் மகாள அமாவாசை அன்று பித்ருகடன் செய்தால் அவர்கள் மனம் மகிழ்ந்து ஆசிர்வாதம் செய்வார்கள்.
இப்படித்தான் வழிபட வேண்டும் என்று கண்டிப்பான வழிமுறைகள் ஏதும் இல்லை. ஆனால் செய்வதை மழு மனதாக பூரண கவனத்துடன் செய்ய வேண்டும். அவரவர் குல வழக்கப்படி சைவச் சாப்பாடு செய்து துறவிகளுக்கும், ஏழை எளியவர்களுக்கும் அன்னதானம் செய்யலாம்.
நதிக்கரையிலோ, கடற்கரையிலோ, முன்னோரை நினைத்து சிறிது எள்ளும், தண்ணீரும் தர்ப்பணம் செய்தாலே அவர்களது தாகமும், பசியும் அடங்கிவிடும் என்று கூறுகின்றன புராணங்கள்.
அவர்கள் மனம் குளிர அன்னதானம், வஸ்திர தானம், பழ வகைகள் தானம் போன்றவற்றைச் செய்தல் நன்மை பயக்கும்.
பசுவிற்கு அகத்திக்கீரை கொடுத்தால் பலருக்கு அன்னதானம் செய்த பலன் கிட்டும். சகல தெய்வங்களும், தேவர்களும் பசுவின் உடலில் வசிப்பதால் அதற்கு செய்யும் தானம் பித்ருக்களை மிகவும் மகிழ்விக்கிறது.
துளசி பரிகாரம்
/indian-express-tamil/media/media_files/yV90AqwkWldZd5ua1V3y.jpg)
சாஸ்திரப்படி, துளசி பரிகாரம் செய்வதால், நம் முன்னோர்கள் மகிழ்ச்சி அடைவார்கள், மேலும் ஷ்ராத்தம், தர்ப்பணம், பிண்டாடனம் செய்த பலன்களை நாம் பெறலாம். துளசி பரிகாரம் பித்ரு பக்ஷத்தின் 16 நாட்களில் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், ஞாயிறு மற்றும் ஏகாதசி நாட்களில் இவற்றைச் செய்யக் கூடாது.
மகாளய பக்ஷத்தின் போது வீட்டில் உள்ள எவரும் துளசியில் திதி வழங்கலாம் என்று சிவபுராணம் கூறுகிறது. இதற்காக துளசி செடியின் கீழ் ஒரு பானை வைக்கவும். பிறகு உள்ளங்கையில் கங்கை நீரை எடுத்துக்கொண்டு, சிவபெருமானின் திருநாமத்தை 5 அல்லது 7 முறை தியானித்து, 5 அல்லது 7 முறை அந்த நீரை பாத்திரத்தில் விடவும். பின்னர் இரு கைகளையும் கூப்பி துளசி தேவியையும் உங்கள் முன்னோர்களையும் நினைத்து தியானியுங்கள்.
இதற்குப் பிறகு, தொட்டியில் உள்ள தண்ணீரை துளசிச் செடி அல்லது வேறு ஏதேனும் செடிகளுக்கு ஊற்றலாம். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி, மகிழ்ச்சியும் அமைதியும் குடியேறும் என்பது நம்பிக்கை.
முன்னோர்கள் ஆசிர்வாதம் நமக்குக் கிடைப்பதால் வாழ்க்கையில் வெற்றியும், மங்களமும் நிறைந்திருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“