/tamil-ie/media/media_files/uploads/2018/08/1-41.jpg)
அமாவாசை நாட்களில் பலர் தங்களது முன்னோர்கள் ஆசி வேண்டி விரதம் இருந்து திதி கொடுப்பர். அதிலும் குறிப்பாக ஆடி, புரட்டாசி அமாவாசை நாட்களில் திதி கொடுப்பது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அந்த வகையில் இந்தாண்டு அக்டோபர் 2-ந் தேதி (புதன் கிழமை) மகாளய அமாவாசை வர உள்ளது. இதையொட்டி, முன்னோர்களுக்கு திதி கொடுக்க உகந்த நேரம், முன்னோர்கள் ஆசி பெற எப்படி தர்ப்பணம் செய்ய வேண்டும் உள்ளிட்டவை பற்றி அனிதா குப்புசாமி கூறியுள்ளார்.
அனிதா குப்புசாமி கூறுகையில், "இந்த மகாளய அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பவர்களுக்கு 21 தலைமுறையில் இருக்க கூடிய சாபம் நீங்கும். வாழ்க்கையும் நன்றாக இருக்கும். தர்ப்பணம் கொடுக்க காலை 11.30 மணிக்கு மேல் மதியம் 1 மணிக்குள் கொடுக்க வேண்டும்.
நண்பகல் நேரத்தில் செய்ய வேண்டும். படையல் போடும் போது உங்கள் முன்னோர்கள் வாழ்ந்த போது அவர்கள் விரும்பி உண்ண உணவுகளை படைக்கலாம். அகத்தீக் கீரை, வாழைக்காய் கட்டாயம் இடம்பெற வேண்டும். படையல் இடும் போது அகல் விளக்கில் விளக்கேற்றவும்.
படையல் இடும் போது ஆண் மகன் சாப்பிடக் கூடாது. அவர் விரதம் இருக்க வேண்டும். பெண்கள் வழக்கம் போல் சாப்பிடலாம். தர்ப்பணம் கொடுக்கும் போது வலது கை மோதிர விரலில் தருப புல்லை மோதிரமாக அணிய வேண்டும். அதன் பின் செம்பு டம்ளர் எடுத்து தண்ணீர் எடுத்து அதில் கருப்பு எள் சேர்க்க வேண்டும்.
கருப்பு எள் பயன்படுத்தும் போது முன்னோர்கள் ஆசி கிடைப்பதாக ஐதீகம். அதில் தருப புல் சேர்த்து விடவும். அதன் பின் பச்சரிசி எடுத்துக் கொள்ளவும். அதன் பின் பூஜை செய்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அதன் பின் இந்த எள் தண்ணீரை நீர்நிலைகளில் விட வேண்டும்" என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.