ஒரு ஆண்டில் 12 மாதமும் அமாவாசை பவுர்ணமி நாட்கள் மாறி மாறி வருவது வழக்கம். இந்த இரு மாதங்களுமே நல்ல நாட்கள் என்று நல்ல காரியங்களை தொடங்கினாலும், அமாவாசை நாட்களில் பலர் தங்களது முன்னோர்களுக்கு விரதம் இருந்து திதி கொடுப்பார்கள். ஒரு ஆண்டின் 12 மாதங்களிலும் இது நடக்கும் என்றாலும், தமிழ் மாதங்களில், ஆடி, புரட்டாசி, உள்ளிட்ட மாதங்களில் வரும் அமாவாசை நாட்கள் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
வழக்கமாக மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில், தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுக்காதவர்கள், ஆடி, மற்றும் புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை நாட்களில், முன்னோர்களை வழிபட்டு, அவர்களுக்கு திதி கொடுக்கும்போது ஆண்டு முழுவதும் திதி கொடுக்காத நாட்களுக்கு சேர்த்து பலன் கொடுக்கும் என்பது முன்னோர்களின் நம்பிக்கையாக உள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி (புதன் கிழமை) மகாளய அமாவாசை வர உள்ளது.
இந்த மகாளய அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பனம் கொடுப்பது, சிறப்பானதாகவும், பித்ருக்களுக்கு, பிடித்த எள்ளு மற்றும் தண்ணீர் வைப்பதும் வழக்கமான ஒன்று. இது எளிமையான தர்ப்பனம் கொடுக்கும் ஒரு முறையாக கடைபிடிக்கப்படுகிறது. மகாளய அமாவாசை நாட்களில், ராகு மற்றும் எமகண்ட் நேரங்களை தவிர, காலை 6 மணி முதல், 1 மணி வரை தர்ப்பணம் கொடுக்கலாம். அதேபோல் முன்னோர்களுக்கு நீர்நிலைகளில் தர்ப்பனம் கொடுப்பது சிறப்பானது.
இந்த நாட்களில், தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் அன்னதானம் செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலம் பித்ருக்களின் தோஷம் நீங்கி, குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்வதாக ஒரு ஐதீகம். எனவே மகாளய அமாவாசை நாட்களில், முன்னோர்களுக்கு தர்ப்பனம் கொடுப்பது, அடுத்த தலைமுறையினருக்கும் ஆசீர்வாதம் கிடைக்கும் என்பது நம்பிக்கை என்பதால், பலரும் இதை கடைபிடிக்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“