Advertisment

மகாளய பட்ச அமாவாசையில் திருஷ்டி சுற்றிப் போடலாமா?

மகாளயபட்ச அமாவாசை நாளில், திருஷ்டி சுற்றிப் போடுவது இன்னும் நல்ல பலன்களை தரும். தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும்.

author-image
WebDesk
Oct 13, 2023 15:54 IST
New Update
இன்று ஆடி அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்க உகந்த நேரம் எது?

Mahalaya Amavasya 2023 October 14 Saturday

புரட்டாசி மாதம் என்பது புண்ணியம் நிறைந்த மாதம் என்பார்கள். அதிலும் புரட்டாசி மகாளய அமாவாசை உன்னதமான நாள்.

Advertisment

அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட வேண்டும். அவர்களின் படங்களுக்கு பூக்களிட்டு, அவர்களை நினைத்து நைவேத்தியப் படையலிட வேண்டும். காகத்துக்கு உணவிடுவது மிக மிக புண்ணியம் நிறைந்தது. அவசியமும் கூட! முடிந்தால் நான்கு பேருக்கேனும் உணவு தானம் செய்ய வேண்டும். இதனால் முன்னோர்களின் பரிபூரண ஆசி கிடைக்கும்.

முக்கியமாக மகாளய பட்ச அமாவாசையில், வீட்டில் உள்ளவர்களுக்கும் வீட்டுக்கும் திருஷ்டி சுற்றிப் போடுவது மிகவும் விசேஷம்.

மாதந்தோறும் அமாவாசையில் திருஷ்டி சுற்றிப் போடுவதும் நல்லதுதான். ஆனாலும் மகாளயபட்ச அமாவாசை நாளில், திருஷ்டி சுற்றிப் போடுவது இன்னும் நல்ல பலன்களை தரும். தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும்.

இந்த ஆண்டு சனிக்கிழமை (அக்: 14) மகாளய பட்ச அமாவாசை.

Hiindu Rituals
Image: Google

இந்த நல்ல நாளில், மாலை வேளையில் வீட்டில் உள்ள அனைவரையும் கிழக்குப் பார்த்து நிற்க சொல்லி, திருஷ்டி சுற்றிப் போடுங்கள். பூசணிக்காய், எலுமிச்சை, தேங்காய் கொண்டு திருஷ்டி கழிப்பதும் நல்லது. பூசணிக்காயில், தேங்காயில், எலுமிச்சையில் சூடமேற்றி, தெருமுச்சந்தியில் அல்லது வாசலில் உடைத்து விடுங்கள். எலுமிச்சையை நான்காகப் உறித்து, நான்கு திசைக்குமாக வீசுங்கள்.

இப்படி செய்வதால் உங்கள் வீட்டு திருஷ்டியெல்லாம் கழியும். இல்லத்தில் தடைப்பட்டிருந்த மங்கல காரியங்கள் இனிதே நடந்தேறும்.

வளர்ச்சிப் பாதையில் வாழ்க்கை செல்லும் என்பது ஐதீகம்…

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

#Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment