Advertisment

மகாளய அமாவாசை 2023: வீட்டிலேயே தர்ப்பணம் கொடுப்பது எப்படி?

முக்கியமா கணவன், அப்பா போன்ற ஆண் மகன்கள் தான் இதை செய்யணும். வீட்டுல இருக்கிற எல்லா ஆண்களும் சேர்ந்து செய்தால் ரொம்ப நல்லது.

author-image
WebDesk
New Update
Mahalaya Paksham 2023

Mahalaya Paksham 2023

Mahalaya Paksham 2023: பொதுவாக அமாவாசை நாட்களில் நம் முன்னோர்களுக்கு நீத்தார்கடன் செய்யும் வழக்கம் நம் நாட்டில் தொன்றுதொட்டு நிலவி வருகிறது.

Advertisment

அந்தவகையில் உத்ராயன காலமான தை மாதத்தில் வருகிற அமாவாசை, புரட்டாசி மகாளய பட்சம் என்று சொல்லப்படும் காலத்தில் வருகிற அமவாசை, தட்சிணாயன காலமான ஆடி மாதத்தில் வருகிற அமாவாசை... ஆகிய மூன்று அமாவாசைகள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்கிறது சாஸ்திரம்.

அதில் மகாளயபட்சத்தின் மிக முக்கியமான நாளான மகாளயபட்ச அமாவாசையில் முன்னோர் வழிபாட்டை நாம் அவசியம் செய்ய வேண்டும்.

இந்த நாளில், தர்ப்பணம் செய்வது மகத்துவம் மிக்கது. ஏனெனில் மகாளயபட்ச காலத்தின் பதினைந்து நாட்களும் முன்னோர்கள், பித்ரு லோகத்தில் இருந்து பூலோகத்தில் வருகிறார்கள். நம் வீட்டுக்கு வருகிறார்கள். நம்மை ஆசீர்வதிக்கிறார்கள் என்பதாக ஐதீகம்.

எனவே இந்த புண்ணிய தினத்தில் அவர்களை மனமுருக நினைத்து வழிபடும் போது, பித்ரு முதலான தோஷங்கள் விலகும். முன்னோர்களின் ஆசியுடன் நீங்கள் முன்னுக்கு வருவீர்கள்.

முன்னோர்கள் ஆசி பெற வீட்டிலேயே  தர்ப்பணம் கொடுப்பது பற்றி அனிதா குப்புசாமி தனது யூடியூப் வீடியோவில் பகிர்ந்து கொண்டார்..

                                                                                                                                   

வீட்டிலேயே தர்ப்பணம் கொடுப்பது எப்படி?

காலையில எழுந்ததும் இன்னைக்கு முன்னோர்களை வழிபடணும்னு மனசுல நினைச்சு அரிசி சாதம் சமைத்த்து, அதில் எள்ளு கலந்து, காப்பர் தட்டு அல்லது வாழை இலையில் பிண்டம் பிடிச்சு வைக்கணும்.

முக்கியமா கணவன், அப்பா போன்ற ஆண் மகன்கள் தான் இதை செய்யணும். வீட்டுல இருக்கிற எல்லா ஆண்களும் சேர்ந்து செய்தால் ரொம்ப நல்லது.

ஆண்கள், தர்ப்ப புல்லை மோதிர விரலில் கட்டிக்கலாம். சிலர் இலையிலேயே 3 தர்ப்ப புல்லை போட்டுருவாங்க. பிறகு ஒரு தாம்பூலம்ல எள்ளு, தண்ணீரும் எடுத்து பக்கத்துல வச்சுக்கணும்.

 Tharpanam

ஆட்காட்டி விரல், பெருவிரல் இரண்டுக்கும் நடுவுல எள்ளு வச்சுட்டு தர்ப்பணம் பண்ணலாம்.

நம் முன்னோர்கள் பெயர்களை சொல்லிட்டு, பெயர் தெரியாத முன்னோர்களுக்கு எங்களோட மூதாதையர்கள் அனைவருக்குமா சேர்த்து நான் இந்த தர்ப்பணம் செய்றேன்னு, மனசுல வேண்டிக்கணும்.

தண்ணீர் கொடுக்கிறதால நம்ம முன்னோர்களோட தாகம் எல்லாம் தீரும். எள்ளு கொடுக்கிறதுனால, அவர்களோட பசி ஆறும். தாம்பூலத்தில் எள் தர்ப்பணம் கொடுத்த நீரை எடுத்துட்டு, நம்ம கால் படாத இடத்துல, மீண்டும் முளைக்காத இடத்துல இந்த தண்ணீரை ஊற்றணும்.  

நீங்க சாதத்துல எள்ளு கலந்து பிண்டம் பிடிச்சு வச்சிருந்தா அதை காக்கைக்கு வைக்கணும். அது நேரடியா நம்ம பித்ருக்களுக்கு போய்ச் சேரும் ஒரு ஐதீகம் உண்டு.

புரட்டாசி மாதத்துல அசைவம் சமைத்து முன்னோர்களுக்கு படைக்கக் கூடாது. இப்படி பல விஷயங்களை அனிதா குப்புசாமி அந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டார்…

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment