மகாளய அமாவாசை அன்று முன்னோர்களுக்காக விளக்கேற்றி, அவர்களை நினைத்து தானம் கொடுப்பதன் மூலம் அவர்கள் செய்த பாவங்கள் நீங்கி, அவர்களுக்கு நற்கதி கிடைக்கிறது.
முன்னோர்களை வழிபட மறந்தவர்கள், வருடத்தில் ஒரு முறையாவது முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டும் என்பதற்கு மகாளய பட்சம் உருவாக்கப்பட்டது. பட்சம் என்றால் 15 நாட்கள். புரட்டாசி மாதத்தில் வரும் பொளர்ணமிக்கு பிறகு வரும் 15 நாட்களும் முன்னோர்களை வழிபட தவறியவர்கள், 15 வது நாளில் வரும் மகாளய அமாவாசை அன்று மறக்காமல் முன்னோர் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
யாரெல்லாம் விரதம் இருக்கலாம்
ஆண்களை பொறுத்த வரை அம்மா, அப்பா இருவரும் இல்லாதவர்கள், பெற்றோரில் ஒருவர் மட்டும் இல்லாதவர்கள், குழந்தைகளை இழந்தவர்கள், மனைவியை இழந்தவர்கள் கண்டிப்பாக அமாவாசை திதியில் விரதம் இருக்க வேண்டும்.
திருமணம் ஆன மற்றும் ஆகாத பெண்கள் அமாவாசை விரதம் இருக்கவோ, எள்ளும் தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் கொடுக்கவோ கூடாது.
மகாளய அமாவாசை தர்ப்பணம் கொடுக்கும் நேரம்:
அக்டோபர் 14ம் தேதி மகாளய அமாவாசை வருகிறது. இந்நிலையில் அந்த நாளில் குளித்துவிட்டு, காலை 6 மணிக்கு மேல் மற்றும் 1 மணிக்குள் நதிக்கரை அல்லது கடற்கரைக்கு சென்று தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
வீட்டிலேயே தர்ப்பணம் எப்படி கொடுப்பது
காசி போன்ற தலங்களை மனதில் நினைத்து பிரார்த்தனை செய்து கொண்டு, முன்னோர்களை மனதில் நினைத்து காசி… காசி.. காசி என்று சொல்லி எள்ளும் தண்ணீரையும் இறைத்து வழிபட வேண்டும். அந்த நீரை கால் படாத இடத்தில் ஊற்றிவிட்டு, பூஜை அறையிலும் முன்னோர்களின் படத்தை வைத்து வழிபட வேண்டும். வழக்கமான பூஜையை செய்ய வேண்டும்.
நேரம்
வாழைக்காய், பூசணிக்காய் உள்ளிட்ட முன்னோர் வழிபாட்டிற்குரிய காய்கறிகளை பயன்படுத்தி சமையல் செய்து, முன்னோர்களுக்கு பிடித்தமான உணவுகளையும் செய்து முன்னோர்கள் படத்திற்கு முன் இலை போட்டு படையல் இட வேண்டும். முன்னோர்களுக்கு பூஜை அறையில் இல்லாமல், வேறு இடத்தில் படையல் இட வேண்டும். காகத்திற்கு உணவளித்து, தொடர்ந்து 2 பேருக்கு உணவளித்து, தொடர்ந்து நாமும் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்யலாம். காலை 10.30 முதல் மதியம் 1.30க்குள் படையலை வைத்து முடித்துவிட வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“