20-வது முறையாக ‘தாய்மை’ அடைந்த 38 வயது பெண்: மருத்துவர்கள் விவரிக்கும் அபாயம்

கரு உருவாகும் பெண்ணின் கருப்பை  ஒரு தசைக்கு சமமாகும், ஒவ்வொரு அடுத்தடுத்த கர்ப்பம் ஆகும் பொது அந்த தசையை நீளம் அதிகப்படுத்தப்படுகிறது.

chennai coronavirus pregnant woman , chennai pregnant women
chennai coronavirus pregnant woman , chennai pregnant women

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த லங்காபாய் காரத் என்ற பெண் தற்போது இருபதாபது முறையாக பிரசவம் அடைந்திருக்கிறாள். தற்போது, அப்பெண்ணிற்கு 11 குழந்தைகள் உள்ளனர். ஐந்து குழைந்தைகள் பிறந்த சில மணி நேரங்களிலே இறந்து விட்டது. மூன்று குழந்தைகள் மூன்று மாத கருவில் இருக்கும் போதே கலைந்தது.

“கோபால் சமூகத்தைச் சேர்ந்த லங்காபாய் காரத் என்ற இந்த பெண் தனது 38 வயதில்  20 வது முறையாக கர்ப்பமாக இருப்பதைப் பார்த்து உள்ளூர் சுகாதார அதிகாரிகள்  திகைத்துப் போனார்கள்.

மாவட்ட அதிகாரி ஒருவர் இது குறித்து தெரிவிக்கையில் ” அவர் கோபால் சமூகத்தைச் சேர்ந்தவர், பொதுவாக தினசரி கூலி (அல்லது) சிறிய நேர வேலைகளில் ஈடுபடுவார்கள் என்றும், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாறிக்கொண்டே இருக்கின்றன பழக்கம் உடையவர்கள்” என்றும் தெரிவித்தார்.

தொடர் பிரசவத்தால் என்ன பிரச்னை?  

மருத்துவர் இது பற்றி தெரிவிக்கையில் ” கரு உருவாகும் பெண்ணின் கருப்பை  ஒரு தசைக்கு சமமாகும், ஒவ்வொரு அடுத்தடுத்த கர்ப்பம் ஆகும் பொது அந்த தசையை நீளம் அதிகப்படுத்தப்படுகிறது, ” என்று  கூறினார்.

இதன் விளைவாக, ஒரு பெண்ணுக்கு பல கர்ப்பங்கள் ஏற்பட்டால், தாயின் இரத்த விநியோகத்துடன் கருவை  இணைக்கும்  நஞ்சுக்கொடி பிரிக்கப் படும்போது   இந்த கருப்பைத்  தசை சுருங்குவது மிகவும் கடினமாக மாறிவிடும் .

இது பெரிய இரத்தப்போக்கு அபாயத்தை உருவாக்கும் சூழல் ஏற்படுகிறது.   அடுத்தடுத்த கர்ப்பங்களால் கருப்பை பலவீனமடைந்துள்ளதால், இந்த சுருக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகள் வெற்றி விகிதம் மிகவும் குறைவானது என்றும் தெரிவித்துள்ளார்” என்றார்.

கருப்பையினுள் கடந்தகால கர்ப்பங்களில் இருந்து வரும் வடு திசு நஞ்சுக்கொடியுடன் சிக்கல்களை ஏற்படுத்தும், மேலும் இது கூடுதல் அபாயங்களையும்  உருவாக்கும் என்றும் அவர் கூறினார்.

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Maharasstra woman pregnant for 20th time problem with continuous pregnancy

Next Story
பெருகி வரும் போலி ரயில் டிக்கெட் செக்கர்கள்- பயனர்களே உஷார்indian railways ticket booking rules
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com