Mahashivratri 2019 wishes : இன்று உலகெங்கும் இருக்கும் சிவ பக்தர்கள் பரம்பொருளாகிய ஈசனை மனமுருகி வேண்டிக் கொள்வார்கள். வருடம் முழுதும் பக்தர்களை காக்கும் சிவ பெருமான் உறங்கும் இந்நாளான சிவ ராத்திரியில், பக்தர்கள் கண் விழித்து அவரை வணங்குவார்கள்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, இங்குள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் சிவராத்திரி விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும்.
மேலும் படிக்க : Maha Shivaratri: மகா சிவராத்திரி விரதத்தின் மகிமை தெரியுமா?
மகா சிவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது ?
சிவபெருமான், லிங்கத்தில் எழுந்தருளி அருள்புரிகின்ற நாளே சிவராத்திரி. பிரம்மதேவனும், திருமாலும் தங்களில் யார் பெரியவர் என்று தெரிந்து கொள்வதற்காக, ஈசனின் அடி, முடிகளை தேடினர். அவர்கள் இருவருக்கும் எட்டாமல் அண்ணாமலையார் அருள் ஜோதியாக ஒளி வீசிய நாளே சிவராத்திரி என்றும் சொல்லப்படுகிறது.
தேவர்களும், அசுரர்களும் அமுதம் வேண்டி திருப்பாற்கடலை கடைந்தபோது அதில் இருந்து ஆலகால விஷம் தோன்றியது. அந்த நஞ்சினை பெருமான் உண்டு உலகை காத்து அருளினார். சதுர்த்தசியன்று தேவர்கள் பூஜை செய்து அர்ச்சித்து வழிபட்டனர். அந்த நாளே சிவராத்திரி என்று சொல்பவர்களும் உண்டு.
Mahashivratri 2019 Wishes
/tamil-ie/media/media_files/uploads/2019/03/shivrathiri-1.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2019/03/shivrathiri-2.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2019/03/shivrathiri-3.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2019/03/shivrathiri-4.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2019/03/shivrathiri-6.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2019/03/shivrathiri-7.jpg)