Advertisment

இட்லி, தோசை வேண்டாமா? டக்குனு மைதா தோசை செஞ்சிடுங்க!

ஈஸியாவும் இருக்கும் டேஸ்டியாவும் இருக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
maida recipe in tamil maida dhosa

maida recipe in tamil maida dhosa

maida recipe in tamil maida dhosa : தினமும் இட்லி, தோசை சாப்பிட்டு போர் அடிக்குதா? அட கவலையை விட டக்குனு, 10 நிமிடத்தில் சூப்பரான மைதா தோசை செஞ்சி சாப்பிடுங்க. ஈஸியாவும் இருக்கும் டேஸ்டியாவும் இருக்கும்.

Advertisment

செய்முறை:

அரிசி மாவு - 1 1/2 கப்

மைதா மாவு - 4 டேபிள் ஸ்பூன்

கெட்டியான மோர் (அ) புளித்த தயிர் - 1 கப்

உப்பு - தேவையான அளவு

சீரகம் - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை, கொத்துமல்லி - சிறிதளவு

பச்சைமிளகாய் - 5

முந்திரி - 15

கொத்தமல்லி, முந்திரி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரிசிமாவு, ரவை, மைதா, உப்பு சேர்த்து நன்றாக கலந்து அதனுடன் மோர் விட்டு கரைக்கவும். பிறகு தேவையான தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து அரைமணி நேரம் வைக்கவும். மாவு, சாதாரண தோசை மாவைவிட நீர்க்க இருக்கவேண்டும். அதனால் ஒரு கப்பிற்கும் அதிகமாகவே தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

தோசை வார்க்கும் முன்பாக மாவுடன் சீரகம், நறுக்கிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உடைத்த முந்திரி சேர்த்து கலக்கவும்.

தோசைக்கல்லைக் காயவைத்து மாவை ஊற்றவும். வழக்கமாக தோசை ஊற்றுவது போல செய்யக்கூடாது. கல் நன்றாகச் சூடானதும் கரண்டியால் ரவாதோசை மாவைக் கலக்கிவிட்டு 2 கரண்டி மாவை எடுத்து தோசைக்கல்லில் தெளித்தாற்போல ஊற்றவும்.

சுற்றிலும் எண்ணெய் விட்டு, தோசை மீதும் கொஞ்சம் எண்ணெய் தெளித்து வேகவிடவும். வெந்ததும் திருப்பிப் போட்டு எடுத்து சட்னிகளுடன் சூடாகப் பரிமாறவும்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Food Recipes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment