New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/04/Makapaup.jpg)
Makapa Anand Lifestyle Youtube Channel Stories Tamil News
Makapa Anand Lifestyle Youtube Channel Stories Tamil News
Makapa Anand Lifestyle Youtube Channel Tamil News : பிரபலங்களுடைய வாழ்க்கை முறை எப்படி இருக்கும் என்கிற ஆர்வம் சாமான்ய மக்களுக்கு அதிகம் உண்டு. முன்பெல்லாம் அவரவர்களின் கற்பனைக்கு ஏற்றபடி பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கைமுறையை நினைத்து வைத்திருந்தனர். ஆனால், தற்போது பிரபலங்களே தங்களுடைய அன்றாட நிகழ்வுகளைக் காணொளியாகப் பதிவு செய்து யூடியூபில் அப்லோட் செய்து வருகின்றனர். அந்த வரிசையில் விஜய் டிவி பிரபலமான மாகாபாவின் சேனலில் அப்படி என்ன ஸ்பெஷல்? பார்ப்போம்…
கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இவருடைய சேனலில் மெயின் கன்டென்ட் இவர் வளர்க்கும் செல்லப்பிராணிதான். வெளிநாட்டு வகை நாய்க்குட்டிகள் வளர்க்கும் இவர், தன் நாய்க்குட்டிக்கென்று தனிப்பட்ட வகையிலான டிசைனர், டயட் மற்றும் குளியல் பிளான் என அதனுடைய மேம்பட்ட வாழ்க்கைமுறையை பதிவு செய்து யூடியூபில் பதிவேற்றியிருக்கிறார். இதற்குதான் எத்தனை ரசிகர்கள்!
பிரபலங்களின் வீடுகளை சுற்றி பார்ப்பதில்தான் மக்களுக்கு எவ்வளவு ஆர்வம்! இவருடைய ஹோம் டூர் வீடியோ 2 மில்லியன் வியூக்களை தாண்டி போய்க்கொண்டிருக்கிறது. மேலும், குக் வித் கோமாளி போட்டியாளர்களாக புகழ், சரத் உள்ளிட்ட சிலரோடு கோவலத்தில் உள்ள சர்ஃப் அண்ட் டர்ஃப் எனும் சர்ஃபிங் விளையாட்டு மையத்தில் எடுத்துக்கொண்ட வீடியோவும் பல லட்சங்களைத் தாண்டி போய்க்கொண்டிருக்கிறது.
மேலும், ஷூட்டிங் ஸ்பாட், கொடைக்கானல் போன்ற சுற்றுலா தளங்களில் தன் நண்பர்களோடு இணைந்து செய்த அட்ராசிட்டிகள் என ஏராளமான விஷயங்கள் இவருடைய சேனலில் உள்ளன. அதுமட்டுமின்றி ஃபுட் சேலஞ், மினி ஃபுட்பால் சேலஞ் என ஏராளமான சேலஞ் வீடியோக்களையும் பதிவு செய்து வருகிறார். இவற்றில் பல ட்ரெண்டிங்கிலும் இடம் பிடித்ததுண்டு. தற்போது வரை சுமார் 4.5 லட்சம் பேர் இவருடைய சேனலை பின்பற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.